பிசாசு 2 படம் ரொம்ப கில்மாவா இருக்கும்.. நி*வாணக் காட்சிகள் பற்றி வெளிப்படையாக பேசிய ஆண்ட்ரியா!
சென்னை: நடிகை ஆண்ட்ரியா தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த வாரம் கவின் உடன் அவர் இணைந்து நடித்த மாஸ்க் திரைப்படத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.
அந்த படத்தை பெரிய ரிஸ்க் எடுத்து கதையை நம்பி தயாரித்த நடிகை ஆண்ட்ரியாவுக்கு படம் பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், போட்ட பணத்தை மீட்டுக் கொடுத்து விடும் என்கிற நம்பிக்கை நிறையவே உள்ளது என்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிசாசு 2 படத்தின் நிர்வாணக் காட்சிகள் குறித்து நடிகை ஆண்ட்ரியா வெளிப்படையாக பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மிஷ்கினின் பிசாசு 2: 2014ம் ஆண்டு கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் நாகா மற்றும் பிரக்யா மார்டின் நடிப்பில் வெளியான பிசாசு திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியது. அந்த படத்தின் 2ம் பாகத்தை ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மிஷ்கின் உருவாக்கியுள்ளார். ஆனால், வழக்கு பிரச்னை காரணமாக இன்னமும் பிசாசு 2 படம் வெளியாகவில்லை. அந்த படத்தில் ஆண்ட்ரியா நிறைய நிர்வாணக் காட்சிகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், சமீபத்தில், கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அதை தெளிவுப்படுத்தியுள்ளார்.
நிர்வாணக் காட்சிகளே இல்லை: மிஷ்கின் சார் பிசாசு 2 படத்தில் நிறைய நிர்வாணக் காட்சிகளை எழுதியது உண்மை தான். ஆனால், அதை படமாக்கும் போது, முற்றிலுமாக மாற்றி விட்டார். நான் எந்தவொரு நிர்வாணக் காட்சியிலும் நடிக்கவில்லை. சிலர், சினிமாவில் ஸ்கெர்ட்டை கழட்ட சொல்லியிருக்கின்றனர். ஆனால், அவர்களுடைய இன்டென்ஷன் என்ன என்பதும் மிஷ்கின் சார் நிர்வாணக் காட்சிகள் பற்றி சொல்லும் போது அவருடைய இன்டென்ஷன் எந்தளவுக்கு சினிமா சார்ந்து இருக்கிறது என்பதும் எனக்கு நல்லாவே புரிந்து தான் அந்த படத்தில் நடித்தேன் என்றார்.
எரோடிக் சீன்கள் இருக்கும்: பிசாசு 2 படத்தில் நிர்வாணக் காட்சிகள் இல்லை என்றாலும், காமத்தை தூண்டக் கூடிய Erotic சீன்கள் நிறையவே படம் முழுக்க உள்ளது என்றும் பிசாசு 2 படம் பற்றி வெளிப்படையாக ஆண்ட்ரியா பேசியுள்ளார். அவர் நடிப்பில் உருவான மனுஷி திரைப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











