Andrea - உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை அனுபவித்த ஆண்ட்ரியா?.. முன்னாள் காதலர் அவ்வளவு மோசமா?
சென்னை: பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. சமீபத்தில்கூட புதுச்சேரியில் ஒரு கான்செர்ட்டை நடத்தினார். அதற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. இந்தச் சூழலில் அவர் தனது முன்னாள் காதலர் குறித்து பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.
நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா ஆரம்பத்தில் பாடகியாக அறியப்பட்டவர். அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற கற்க கற்க, ஆதவன் படத்தில் இடம்பெற்ற ஏனோ ஏனோ உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர். பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் கலக்கினார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவின் தனித்துவமான குரலுக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையான ஆண்ட்ரியா: பாடகியாக பிரபலமான ஆண்ட்ரியா கண்டநாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்டது. இதனையடுத்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்தார் ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது.
செல்வராகவன் ஹீரோயின்: இதனையடுத்து சில வருடங்கல் நடிக்காமல் பாடுவதில் கவனம் செலுத்திய ஆண்ட்ரியா செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார். வரலாற்று ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தை ஏற்ற ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவனில் சிறந்த நடிப்பை வழங்கினார். அந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி பாடல் பாடவும் செய்தார். ஆயிரத்தில் ஒருவனில் நடித்த பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன.
முன்னணி நடிகை: அதன்படி அஜித் நடித்த மங்காத்தா, கமல் நடித்த விஸ்வருபம், உத்தம வில்லன், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, சுந்தர் சி நடித்த அரண்மனை என ஏராளமான தமிழ் படங்களிலும், அன்னையும் ரசூலும் உள்ளிட்ட மலையாள படத்திலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர ஆரம்பித்திருக்கிறார் ஆண்ட்ரியா.
வடசென்னை ஆண்ட்ரியா: ஆண்ட்ரியாவின் கரியரிலேயே முக்கியமான படம் வடசென்னை. அமீரின் மனைவியாக சந்திரா என்ற கதாபாத்திரத்தில்; தனது கணவரை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக காத்திருப்பதும், கிடைக்கும் சந்தர்ப்பத்தையெல்லாம் தனக்காக மாற்றிக்கொள்வதும் என ஆண்ட்ரியாவின் நடிப்பு வடசென்னை படத்தின் ப்ளஸ்களில் ஒன்றாகும். இப்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிப்பில் பிஸியாக இருந்தாலும் பாடுவதையும் விடாமல் வைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புகூட அவர் புதுச்சேரியில் கான்செர்ட் ஒன்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரியா பேட்டி: இதற்கிடையே அவர் இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்தார். ஆனால் அந்தக் காதல் பாதியிலேயே முடிந்தது. அதனையடுத்து இன்னொருவரை அவர் காதலித்ததாகவும், லிவிங் டூ கெதரில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "கடந்த சில வருடங்களில் திருமணம் செய்துகொண்ட சிலர் மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும். நிறைய பேர் திருமணம் செய்துகொள்ளாமல் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறார்கள்.
கொடுமைகளை அனுபவித்தேன்: நான் காதலில் இருந்தபோது என்னுடைய காதலர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை ரொம்பவே துன்புறுத்தினார். அதனால் நான் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். அதனால்தான் சினிமாவிலிருந்து சில காலம் நான் விலகியிருந்தேன்" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் ஆண்ட்ரியாவை அவ்வளவு கொடுமைப்படுத்தியது யாராக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் விவாதிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











