சிம்பு, ஆண்ட்ரியா நெருக்கம்: ஹன்சிகா விளக்கம்
சென்னை: சிம்புவும், ஆண்ட்ரியாவும் நெருக்கமாக நடித்தது தனக்கு தவறாக தெரியவில்லை என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகர் வி.டி.வி. கணேஷ் ஹீரோவாகியுள்ள படம் இங்க என்ன சொல்லுது. இந்த படத்தில் சந்தானமும் உள்ளார். படத்தில் சிம்புவும், ஆண்ட்ரியாவும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர்கள் காதலில் விழுந்ததாக செய்திகள் வெளியாகின.

நெருக்கம்
படக்காட்சியில் சிம்பு படுத்திருப்பது போன்றும், ஆண்ட்ரியா அவர் அருகில் நெருக்கமாக இருப்பது போன்றும் உள்ள புகைப்படங்கள் வெளியாகி பரபப்பை ஏற்படுத்தின. இதையடுத்து சிம்புவுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் இடையே காதல் என்ற பேச்சு கிளம்பியது.

நான் சிங்கிள்
சிம்புவுடன் காதல் இல்லை. ஆண்ட்ரியா சிங்கிளாக தான் உள்ளார். அவர் வேலையில் கவனம் செலுத்தவே விரும்புகிறார் என்று அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

ஹன்சிகா
சிம்பு, ஆண்ட்ரியாவின் நெருக்கத்தால் ஹன்சிகா கோபத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து தனக்கு எந்த கோபமும் இல்லை என்று சிம்புவின் காதலியான ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

நெருக்கத்தில் தப்பில்லை
காதல் காட்சிகளில் நான் கூடத் தான் ஹீரோக்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன். நானும், சிம்புவும் நடிகர்கள். எங்களுக்கு நெருக்கமாக நடிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றார் ஹன்சிகா.


Click it and Unblock the Notifications











