இனி கிளாமருக்கு குட் பை ஆ?...ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ஆண்ட்ரியா

சென்னை : மைனா, சாட்டை போன்ற தரமான சமூக அக்கறையுள்ள மிக உன்னதமான திரைப்படங்களை எடுத்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரிப்பில் ஆறாவது படைப்பாக "கா" திரைப்படம் வெளி வருகிறது.

நடிகை, பின்னணி பாடகி, இசைக் கலைஞர், டப்பிங் கலைஞர் என சினிமாவில் பல அவதாரங்கள் எடுத்த நடிகை ஆன்டிரியா, தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு, இந்தி மொழி சினிமாக்களிலும் பணியாற்றி உள்ளார். தமிழில் கண்டநாள் முதல் படத்தின் மூலம் நடிகையான ஆன்டிரியா, பல படங்களில் பயங்கர கிளாமர் காட்டி நடித்து வருகிறார்.

நிர்வாணமாக நடிக்கும் ஆன்டிரியா

நிர்வாணமாக நடிக்கும் ஆன்டிரியா

அரண்மனை படத்தில் போயாக நடித்தவர், தற்போது ஒரே சமயத்தில் 6 படங்களில் நடித்து வருகிறார். இதில் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் சில காட்சிகளில் நிர்வாணமாக நடித்திருப்பதாக சொல்லி பரபரப்பை கிளப்பி உள்ளார். சோஷியல் மீடியாக்களிலும் கண்டபடி கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஆன்டியா.

அடுத்து ஆக்ஷன் அவதாரம்

அடுத்து ஆக்ஷன் அவதாரம்

இந்நிலையில் கா படத்தில் ஆண்ட்ரியா லீட் ரோலில் நடிக்கிறார். காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக முதன் முறையாக ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த சலீம் கவுஸ் வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சின்னத்திரை புகழ் கமலேஷ், காற்றுக்கென்ன வேலி புகழ் அக்ஷிதா, சூப்பர் டீலக்ஸ் பட புகழ் நவீன், கும்கி பட புகழ் மூணார் சுப்பிரமணியன் ஆகியோருடன் அர்ஜுன் சிங் என்கிற புதுமுக நடிகரும் நடித்துள்ளனர்.

காட்டுக்குள் திகில் படம்

காட்டுக்குள் திகில் படம்

முழுக்க முழுக்க காட்டின் பின்னணியில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்கியுள்ளார். கத்தால கண்ணாலே பாடல் புகழ் சுந்தர் சி பாபு இசையமைக்க, அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய, எலிசா படத்தொகுப்பை செய்துள்ளார். மேலும் சேதுவின் சிறப்பு சப்தமும், தரணியின் மிரட்டல் ஒலி கலவையும் இப்படத்தின் சிறப்பம்சமாக பேசப்படும்.

சம்பவமும் ரெடியாகுதா

சம்பவமும் ரெடியாகுதா

படம் பார்ப்பவர்களை ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்று வந்த திகில் அனுபவத்தை நிச்சயமாக கொடுக்கும். படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் ஷாலோம் ஸ்டுடியோஸ் தங்களது ஏழாவது படைப்பாக ஸ்ரீகாந்த், தினேஷ் மாஸ்டர் நடிப்பில் "சம்பவம்" என்கிற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X