»   »  ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜோடியாக நடிக்கணும்... ஆன்டிரியாவின் ஆசை

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜோடியாக நடிக்கணும்... ஆன்டிரியாவின் ஆசை

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டான் ஆக ஒரு படத்தில் நடிக்கணும், அவருக்கு ஜோடியாக நான் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார் நடிகை ஆன்டிரியா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு நடத்தி வரும் 'சிம்ப்ளி குஷ்பு' நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கமல், சிம்பு, ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திக்கேயன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அஜீத்,விஜய் கலந்து கொள்ளாவிட்டாலும், இவர்களை பற்றிய கேள்வியோ அல்லது பதிலோ அனைத்து எபிசோட்களிலும் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமையன்று ஆன்ட்ரியாவிடம் குஷ்பு கேட்ட பல கேள்விகளுக்கு குறும்பாகவே பதிலளித்தார் ஆன்டிரியா.

கிசு கிசு வரணும்

கிசு கிசு வரணும்

ஆன்டிரியாவை பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துள்ளன. அவருக்கு ரன்பீர் கபூர் இணைந்து கிசுகிசு வரவேண்டும் என்று ஆசையாம்.

முத்தம் கொடுக்கணும்

முத்தம் கொடுக்கணும்

யாருக்காவது ஒரு முத்தம் கொடுக்கவேண்டும் என்றார் அது ரன்பீர் கபூருக்குத்தான் கொடுப்பேன் என்று கூறி தப்பித்துக்கொண்டார்.

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான்

விஜய் ஆன்டணி, ஜி.வி.பிரகாஷ் போல இசையமைப்பாளர் புதிதாக ஹீரோவாக நடித்தால் ஜோடியாக நடிப்பீர்களா? என்று குஷ்பு கேட்டுவிட்டு ஆன்டிரியாவின் முகத்தையே பார்த்தார். சட்டென்று பதில் சொன்ன ஆன்டிரியாவோ, ஏ.ஆர். ரகுமான் ஹீரோவாக நடித்தால் ஜோடியாக நடிப்பேன் என்றார். அனிருத் என்ற பெயரை ஆன்டிரியா சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனார் குஷ்பு.

அஜீத் உடன் ஜோடி

அஜீத் உடன் ஜோடி

எந்த நடிகரின் படம் என்றால் கதை மற்றும் கேரக்டரை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொள்வீரகள்? என்ற கேள்வியை குஷ்பு, ஆண்ட்ரியா முன் வைத்தபோது, ஆண்ட்ரியா சிறிதும் யோசிக்காமல் 'அஜீத்' என்று பதில் குறி அனைவரையும் அசர வைத்தார்.

லவ் லெட்டர் வரலையே

லவ் லெட்டர் வரலையே

தனக்கு இதுவரை எந்த ஒரு லவ் லெட்டரும் வந்தததில் என்று வருத்தப்பட்டார் ஆன்டிரியா. அதே நேரத்தில் தனக்கு நிறைய போன் வரும் என்றும் ரசிகர்கள் பலரும் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்பார்கள் என்றும் வெளிப்படையாக தெரிவித்தார்.

ஆன்டிரியாவின் ஆசை

ஆன்டிரியாவின் ஆசை

தனக்கு வரப்போகும் கணவன், பொய் சொல்லக்கூடாது. தனக்கு உண்மையானவனா இருக்கணும், லாயல்டியாக என்னைத்தவிர வேற எந்தப் பொண்ணையும் பார்க்கக் கூடாது என்றார் ஆன்டிரியா.

English summary
The versatile actress, playback singer, musician and dancer, Andrea Jeremiah. Andrea shares about her childhood days to the start of her career as a playback sing to her appearance in films. The show also has interesting segment where both Khushboo and the guest play dumb charades.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil