தன்னை ஏமாற்றி சீரழித்த அந்த நபர்.. இன்று அம்பலப்படுத்தும் ஆண்ட்ரியா.. எகிறும் எதிர்பார்ப்பு!

தன்னுடன் உறவு வைத்திருந்த அந்த நபர் யார் என்பதை இன்று வெளியிட நடிகை ஆண்ட்ரியா முடிவு செய்துள்ளார்.

Recommended Video

MeeToo Andrea : ஆண்ட்ரியாவை கொடுமைப்படுத்திய நடிகர்- வீடியோ

சென்னை: தன்னை மன அழத்தத்திற்கு ஆளாக்கிய அந்த நபர் யார் என்பதை நடிகை ஆண்ட்ரியா இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஆண்ட்ரியா கடந்த சில மாதங்களாக தீவிர மன அழுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் கேரளா சென்று மாதக் கணக்கில் தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சை எடுத்து கொண்டார். இத்தனை நாட்கள் சிகிச்சை எடுக்கும் அளவுக்கு ஆண்ட்ரியாவுக்கு அப்படி என்ன மன அழுத்தம் என ரசிகர்கள் கவலைப்பட்டனர்.

திருமணமான ஒரு நபருடன் தான் தவறான உறவு வைத்திருந்ததாகவும், அந்த நபர் தன்னை உடலளவில் மிகவும் காயப்படுத்தியதாகவும் ஆண்ட்ரியா கூறியிருந்தார். தான் செய்த தவறால் தன் வாழ்க்கையே இருண்டு போய்விட்டது என்றும் அவர் கூறியிருந்தார்.

முறிந்த சிறகுகள் புத்தகம்

முறிந்த சிறகுகள் புத்தகம்

சம்மந்தப்பட்ட அந்த நபர் யார் என அப்போது அவர் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அதுபற்றிய விஷயங்களை வைத்து முறிந்த சிறகுகள் எனும் கவிதை நூலை எழுதியதாக ஆண்ட்ரியா குறிப்பிட்டிருந்தார்.

யார் அந்த நபர் ?

யார் அந்த நபர் ?

இந்த விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. யார் அந்த நபர் என பலவிதமான யூகங்கள் வெளிவந்தன. கடைசியில் அந்த நபர் சினிமாவிலும், அரசியல் அதிகாரத்திலும் பெரிய ஆள் என்பது தெரியவந்தது.

ஆண்ட்ரியாவின் அறிவிப்பு

ஆண்ட்ரியாவின் அறிவிப்பு

இந்நிலையில் ஆண்ட்ரியா தான் எழுதிய முறிந்த சிறகுகள் புத்தகத்தை மீண்டும் வெளியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அக்டோபர் 17ம் தேதி, அதாவது நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் புத்தகத்தை வெளியிட இருப்பதாக அவர் கூறியிருந்தார். அதில் தன்னை ஏமாற்றியது யார் என்பதை ஆண்ட்ரியா வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இன்று வெளியிடுவாரா?

இன்று வெளியிடுவாரா?

ஆனால் சொன்னபடி நேற்றைய தினம் முறிந்த சிறகுகள் புத்தகத்தை அவர் வெளியிடவில்லை. அதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இன்றைய தினமாவது தனது புத்தகத்தை ஆண்ட்ரியா வெளியிடுவாரா, தன்னை ஏமாற்றிய நபர் குறித்து அவர் வெளிப்படையாக சொல்வாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

மீண்டு வந்த ஆண்ட்ரியா

மீண்டு வந்த ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா தற்போது தனது மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். மேடை பாடல் நிகழ்ச்சிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு சில படங்களிலும் ஆண்ட்ரியா கமிட் ஆகியுள்ளார். விரைவில் தொடங்க உள்ள வடசென்னை 2 படத்தின் படப்பிடிப்பிலும் ஆண்ட்ரியா கலந்துகொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X