ஆயிரத்தில் ஒருவன் 2வா ஆளவிடுங்கப்பா.. ஆண்ட்ரியா இப்படி அலறுகிறாரே.. அந்த கிசுகிசுதான் காரணமா?
சென்னை: பின்னணி பாடகி, நடிகை, தயாரிப்பாளர் என பல அவதாரங்களை கொண்டிருக்கும் ஆண்ட்ரியா நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு மாஸ்க் திரைப்படம் வெளியானது. அப்படத்தை அவரே தயாரித்திருந்தார். மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் பற்றி அவர் நக்கலாக பேசிய வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
அனைவராலும் ரசிக்கப்படும் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் ஆண்ட்ரியா முதலில் பின்னணி பாடகியாகத்தான் உள்ளே வந்தார். கௌதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் அவரை நடிகையாக மாற்றியது. அந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து; நடிப்பில் பிஸியானார். நடிகையாக பயணப்பட்டாலும் தன்னை வளர்த்த பாடல் துறையை மறக்காமல் பாடல்களும் பாடிவருகிறார்.
தயாரிப்பாளர் அவதாரம்: இத்தனை நாட்கள் நடிகை, பின்னணி பாடகியாக வலம் வந்த அவர்; விகர்ணன் இயக்கத்தில் கவின் ஹீரொவாக நடித்திருக்கும் மாஸ்க் படத்தில் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். இப்படத்தை அவருடன் சேர்ந்து வெற்றிமாறனும் தயாரித்திருக்கிறார். ஆண்ட்ரியா இதனை தயாரித்தது மட்டுமின்றி வில்லியாகவும் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் ஏமாற்றம்தான்: இந்தப் படத்தை தயாரிப்பதற்காக தனது வீட்டையெல்லாம் அடமானம் வைத்திருந்தார். எப்படியாவது கொள்ளை லாபம் கிடைக்கும் நம்பிக்கொண்டிருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதுவரை படம் வெளியாகி ஐந்து நாட்களில் மொத்தமே 5 கோடி ரூபாயைத்தான் வசூலித்திருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் போட்ட முதலைகூட எடுக்க முடியாதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
ஆண்ட்ரியாவின் பெர்சனல் வாழ்க்கை: இது ஒருபக்கம் இருக்க ஆண்ட்ரியாவின் பெர்சனல் வாழ்க்கை அவ்வப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கின்றன. முதலில் தன்னைவிட வயது குறைந்தவரான அனிருத்தை காதலித்தார். இரண்டு பேரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதனையடுத்து இன்னொரு பிரபலத்துடனும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால் அதுவும் பாதியில் முடிந்தது.
செல்வராகவனுடன் கிசுகிசு: இவை அனைத்தையும் தாண்டி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் செல்வராகவனுடன் கிசுகிசுக்கப்பட்டார். இரண்டு பேரும் நெருங்கி பழகியதால்தான் செல்வாவுக்கும், சோனியா அகர்வாலுக்கும் விவாகரத்தே நடந்ததாகவும் ஒரு பேச்சு அப்போது கிளம்பியது. ஆனாலதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் 2 பற்றி நக்கலாக பேசியிருக்கிறார்.
ஆண்ட்ரியாவின் பேச்சு: சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ஆயிரத்தில் ஒருவர் 2, 3 வருமா என தொகுப்பாளர் கேட்க; அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, 'நான் வரல ப்பா. அதெல்லாம் ஒரு முறைதான். அந்தப் படத்தில் எனக்கு பிடித்த பாடல் என்றால் மாலை நேரமே பாடல்தான். ஆனால் அது படத்தில் வரவில்லை. அந்தப் பாடல் ரெக்கார்ட் செய்யும்போது எனக்கு ரொம்பவே ஜலதோஷம் இருந்தது" என்றார். முன்னதாக, செல்வராகவனுடன் தன்னை இணைத்து கிசுகிசுக்கள் கிளம்பியதால்தான் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்கமாட்டேன் என்று ஆண்ட்ரியா சொன்னதாகவும் பரவலான கருத்து எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











