ரன்பீர் கபூருடன் லிப் லாக் செய்ய ஆசை: ஆன்ட்ரியா

By Mayura Akilan

பாலிவுட் நடிகருடன் லிப் லாக் சீனில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகை ஆன்ட்ரியா வெட்கம் கலந்த புன்னகையோடு கூறியுள்ளார்.

நடிப்பு, பாடல்,பின்னணி குரல் என பன்முகத்தன்மை கொண்ட ஆன்ட்ரியா விஜய் டிவியின் நிரந்தர சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பல நிகழ்ச்சிகள் பங்கேற்கிறார்.

இந்தவாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரும் நடிகை ஆன்ட்ரியாதான்.தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கேட்ட அனைத்து கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி புன்னகை மாறாமல் பதில் சொன்னார் ஆன்ட்ரியா.

சிம்பு உடன் காதலா?

சிம்பு உடன் காதலா?

என்னிடம் சிம்பு சரியாக கூட பேசியதில்லை. இங்க என்ன சொல்லுது படத்தில் மொத்தம் 4 மணிநேரம்தான் ஷூட்டிங். சிம்பு 2 மணிநேரம் மட்டுமே என்னுடன் இருந்தார். அதற்குள் இருவருக்கும் காதல் என்று வதந்தி பரப்பிவிட்டனர்.

போன் நம்பர் கூட இல்லை

போன் நம்பர் கூட இல்லை

சிம்புவின் போன் நம்பர் கூட என்னிடம் இல்லை. பத்ரிக்கையாளர்கள் கூட கற்பனை செய்து எழுதுறாங்க.

இசை படிக்க ஆசைப்பட்டேன்

இசை படிக்க ஆசைப்பட்டேன்

அமெரிக்காவில் இசை படிக்க ஆசைப்பட்டேன். திடீரென்று கவுதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் படிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் வாய்ப்பு கிடைத்து பல வருடங்கள் இழுத்துவிட்டது.

லிப் லாக் செய்ய…

லிப் லாக் செய்ய…

லிப் சீனில் நடிப்பது என்றால் பாலிவுட் பட உலகில் ரன்பீர் கபூர்தான் பெஸ்ட். தமிழ் நாயகர்கள் யாருடன் என்பதை கூற முடியாது.

பகத் பாசில் உடன்

பகத் பாசில் உடன்

ஆன்ட்ரியா மலையாள படமொன்றில் பகத் பாசில் உடன் லிப் லாக் சீனில் நடித்திருப்பார். ஆனால் அது ரொமான்ஸே கிடையாது என்று கூறினார்.

அனிருத் - ஆன்ட்ரியா

அனிருத் - ஆன்ட்ரியா

அனிருத் உடன் நிஜத்தில் கொடுத்த லிப் லாக் இணையங்களில் உலா வந்தது அது உண்மைதான் என்றும் ஒத்துக்கொண்டார் ஆன்ட்ரியா.

லண்டன் மாப்பிள்ளை

லண்டன் மாப்பிள்ளை

பெற்றோர்கள் பார்த்து வைக்கும் மாப்பிள்ளை என்றால் எனக்கு லண்டன் மாப்பிள்ளைதான் வேண்டும் என்றார் ஆன்ட்ரியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X