»   »  அழகிய அட்டகாசம் ஆண்ட்ரியா

அழகிய அட்டகாசம் ஆண்ட்ரியா

Subscribe to Oneindia Tamil

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருடன் இணைந்து ரசிகர்களின் இதயங்களை துவம்சம் செய்யக்காத்திருக்கும் ஆண்ட்ரியா, அடுத்து சூர்யாவுடன் இணைந்து கலக்கவுள்ளார்.

வேட்டையாடு விளையாடு படத்திற்குப் பின்னர் கெளதம் மேனனின் இயக்கத்தில் உருவாகும் படம்தான்பச்சைக்கிளி முத்துச்சரம் (முன்பு சிலந்தி). சரத்குமாரை முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் கெளதம் இதில்கையாண்டுள்ளார். ஜோதிகாதான் ஹீரோயின்.

ஆனால் ஆண்ட்ரியா என்ற ஒரு அட்டகாச அழகியும் இப்படத்தில் இருக்கிறார். மும்பையிலிருந்து கூட்டிவரப்பட்ட ஆண்ட்ரியா, படு அழகாக இருக்கிறார். கிளாமர் சைடுக்கு ஜோதிகாவை பயன்படுத்த முடியாதுஎன்பதால் ஆண்ட்ரியாவை வைத்து கொஞ்சம் விளையாட்டுக் காட்டியிருக்கிறார்களாம்.

ஆண்ட்ரியாவின் அசத்தலைப் பார்த்து மிரண்டு போன கெளதம், இப்போது தனது அடுத்த படத்தில்ஆண்ட்ரியாவை ஹீரோயினாக்கி விட்டார். சரத் படத்தை முடித்த பின்னர் சூர்யாவை வைத்து உடல், பொருள்,ஆவி என்ற பெயரில் புதிய படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார் கெளதம்.

அந்தப் படத்தின் பெயர் இப்போது வாரணம் ஆயிரம் என படு சுத்தமான தமிழுக்கு மாறி விட்டது. ஆஸ்கர்பிலிம்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு படு வித்தியாசமான ரோலில் நடிக்கவுள்ளாராம்சூர்யா.

காக்க காக்க படத்திற்குப் பிறகு சூர்யாவும், கெளதம் இணைவதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல இதுவும் ஆக்ஷன் திரில்லர் கதைதான் என்ற போதிலும், இதுவரை கெளதம் இயக்கிய படங்களிலேயேசற்று வித்தியாசமாக இது இருக்குமாம்.

ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை, வழக்கம் போல தாமரைதான் பாடல்கள். கேமராவுக்கு ரத்னவேலு, எடிட்டிங்குக்குஆண்ட, டான்ஸுக்கு பிருந்தா என கெளதமின் டீம் அப்படியே இந்தப் படத்திலும் களம் இறங்குகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஆண்ட்ரியாதான் இப்போதைக்கு ஹாட் டாப்பிக். இவரிடம் நல்ல நடிப்புத்திறமை ஒளிந்திருப்பதை பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின்போது பார்த்ததால்தான் வாரணம் ஆயிரம் படத்தின்ஹீரோயினாக இவரை மாற்றி விட்டாராம் கெளதம்.

அதுவும் போக, இந்தப் படத்தின் கதைக்கு ஆண்ட்ரியாவின் அழகிய கெட்டப்பும், ரிச்னஸும் ரொம்பவேயூஸ்ஃபுல்லாக இருக்கும் என்பதும் இன்னொரு காரணம்.

கெளதம் படத்தில் அதிகம் நடித்த நடிகையாக இதுவரை ஜோதிகா மட்டுமே உள்ளார். இப்போது ஆண்ட்ரியாஅந்த இடத்திற்கு வருகிறார் என்று கூட கூறலாம்.

அசத்துங்க ஆண்ட்ரியா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil