அனேகன் வில்லியை பார்த்து கடலே கொந்தளித்து விடும் போல.. மாலத்தீவில் ரெட் வெல்வெட் கேக் நடந்து வருதே!

சென்னை: அனேகன் பட ஹீரோயினையே இன்ஸ்டாகிராமில் பின்னுக்குத்தள்ளிவிடுவார் போல தெரிகிறது. அனேகன் படத்தில் வில்லியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா தேவன் சினிமா மற்றும் சின்னத்திரையிலிருந்து விலகிய நிலையில், இன்னமும் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுக்கும் வகையில் நீச்சல் உடை போட்டோக்களையும் மாலத்தீவில் டூர் அடித்துள்ள நிலையில், உச்சகட்ட கிளாமர் போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

தெலுங்கில் 2011ம் ஆண்டு வெளியான கெரட்டம் படத்தில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா தேவன், அதே படம் தமிழில் யுவன் என டப்பிங் செய்யப்பட்ட நிலையில், கோலிவுட்டிலும் கால் பதித்தார். அங்கிருந்து அப்படியே மலையாளத்துக்குச் சென்ற ஐஸ்வர்யா தேவன், தி ஹிட்லிஸ்ட், சிம்மாசனம், கர்மயோதா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Anegan fame Aishwarya Devan stunning Red Glamour beach dress at Maldives melts fans hearts
Photo Credit:

சென்னையில் ஒருநாள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா தேவன் கே.வி. ஆனந்த் கண்ணில் பட்ட நிலையில், அனேகன் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து செம ஸ்கோர் செய்தார். ஆனால், 2015ம் ஆண்டு வெளியான அந்த படத்துக்குப் பிறகு தமிழில் இவரை யாருமே பயன்படுத்தவில்லை.

மார்க்கெட் இழந்த ஐஸ்வர்யா தேவன்: ஆரம்பத்தில் இருந்தே அழகு மாடலான ஐஸ்வர்யா தேவன் ஹீரோயினாக நடிக்க ரொம்பவே முயற்சி செய்து முடியாமல் போன நிலையில், சைடு ரோல்களில் நடிக்க வேண்டாம் என்கிற முடிவுடன் சினிமாவில் இருந்தே 2018ம் ஆண்டு விலகி விட்டார். பெரியளவில் சினிமாவில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 31 வயதே ஆகும் இந்த நடிகை கடந்த 7 ஆண்டுகளாக எந்தவொரு படத்திலும் கமிட் ஆகவே இல்லை.

Anegan fame Aishwarya Devan stunning Red Glamour beach dress at Maldives melts fans hearts
Photo Credit:

அனேகனில் அட்டகாசம்: கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், கார்த்தி, அமைரா தஸ்தூர் நடித்து வெளியான அனேகன் படத்தில் இவரது கதாபாத்திரம் அட்டகாசமாக இருக்கும். வில்லி என்று சொல்வதை விட 2வது ஹீரோயின் போலவே ஹீரோவுடன் யோலோ பாடலுக்கு ஆடிப்பாடுவது என தூள் கிளப்பியிருப்பார். அதிலும், அந்த கேமிங் பேய் சீனில் எல்லாம் பிணமாக இருந்து திடீரென விழித்துப் பார்க்கும் சீன் எல்லாம் வேறலெவலில் திகிலூட்டும்.

மாலத்தீவில் நடந்து வரும் ரெட் வெல்வட்: சமீபத்தில்ல், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஐஸ்வர்யா தேவன் அங்கே நீச்சல் உடையில் கவர்ச்சிப் பொங்க ஏகப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், நடந்து வரும் ரெட் வெல்வட் கேக் போல கண்ட இடத்தில் காத்து வாங்கும் அளவுக்கு தாராள கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் பல்ஸை அதிகரித்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X