தகதகவென மின்னும் அனேகன் நாயகி... எகிறும் ரசிகர்களின் இதயத்துடிப்பு !

மும்பை : இயக்குனர் கே.வி.ஆனந்தின் வித்தியாசமான சிந்தனையில் உருவான அனேகன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அமிரா தஸ்தூர் மீண்டும் தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

படுபயங்கரமான ஹாரர் திரைப்படமாக உருவாகிவரும் இந்த திரைப்படத்திற்கு பஹிரா என பெயரிடப்பட்டுள்ளது.

ஒருபுறம் பஹிரா திரைப்படத்தின் படப்பிடிப்பு சூறாவளி வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க இப்பொழுது அமிரா தஸ்தூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழைத்தண்டு தொடையைக் காட்டிக்கொண்டு செஞ்சி வச்ச சிலை போல அம்சமாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கந்தலாக்கி வருகிறார்.

கே வி ஆனந்த் இயக்கத்தில்

கே வி ஆனந்த் இயக்கத்தில்

இந்தியில் பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அமிரா தஸ்தூர் தமிழில் இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அனேகன் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

பூர்வ ஜென்மத்தை

பூர்வ ஜென்மத்தை

மிகவும் வித்தியாசமான கதைகளத்தைக் கொண்ட அனேகன் திரைப்படம் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் புதுவிதமான அனுபவத்தை கொடுத்ததாக கூறியிருந்தனர். மேலும் இந்த திரைப்படம் பூர்வ ஜென்மத்தை, கேமிங் உடன் தொடர்பு படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

ஜாக்கி ஜானின் கும்ஃபூ யோகா

ஜாக்கி ஜானின் கும்ஃபூ யோகா

எனினும் முதல் திரைப்படமே இவருக்கு பெரும் புகழை பெற்று தந்த நிலையில் இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் தமிழில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அதன் பின் எந்த தமிழ் படங்களிலும் தோன்றாமல் ஹிந்தியில் பிரபலமான நடிகர்களுடன் நடித்து தூள் கிளப்பி வரும் அமிரா தஸ்தூர் ஜாக்கிஜான் நடிப்பில் வெளியான கும்ஃபூ யோகா என்ற ஹாலிவுட் திரைப் படத்திலும் நடித்துள்ளார்.

பஹிரா

பஹிரா

இவ்வாறு ஹாலிவுட் வரை பிரபலமாகியுள்ள அமிரா தமிழ் ரசிகர்கள் ரொம்பவும் மிஸ் பண்ணுவதாக எண்ணி வந்த நிலையில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் பஹிரா திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.

செஞ்சு வச்ச சிலை போல

செஞ்சு வச்ச சிலை போல

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் அமிராவை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் வரவேற்க காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழைத்தண்டு போல பளபளவென இருக்கும் தொடையை காட்டிக்கொண்டு கால்களைப் பின்னிப் பிணைந்த செம ஸ்டைலிஷான போஸில் பார்க்க செஞ்சு வச்ச சிலை போல கொள்ளை அழகில் இருக்கும் அமிரா தஸ்தூரின் இந்த கவர்ச்சி சிலை புகைப்படம் ரசிகர்களை கந்தலாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X