தொழிலதிபருடன் திருமணம்.. அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டேன்.. நடிகை அஞ்சலி சொன்ன உண்மை!

சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அஞ்சலி. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். மங்காத்தா, இறைவி, பேரன்பு, பலூன், சிந்துபாத் ஆகிய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ள இவர், தன் திருமண வாழ்க்கை குறித்து இணையத்தில் பரவி வரும் தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த அஞ்சலி, தனது சித்தி துணையுடன் சென்னையில் உள்ள வடபழனி பள்ளியில் படித்து வந்தார். அப்போது தான் கற்றது தமிழ் திரைப்படத்திற்காக இயக்குநர் ராம் புதுமுகத்தை தேடும்போது அவர் கண்ணில் பட்டார் அஞ்சலி. கற்றது தமிழ் படத்தில் அஞ்சலி நடித்த போது அவர் 10ம் வகுப்ப படித்துக்கொண்டு இருந்தார். முதல் படத்திலேயே டேக்கே இல்லாமல் வசனத்தை பேசி படப்பிடிப்பு தளத்திலேயே கைத்தட்டலை பெற்றார் அஞ்சலி. முதல் படமே அஞ்சலிக்கு சிறந்த நடிகை என்ற பெயரை பெற்று தந்தது.

Angadi theru Actress Anjali explained about marriage rumors

இந்த நேரத்தில் இயக்குநர் வசந்த பாலன் அங்காடி தெரு திரைப்படத்திற்காக நடிகையை தேடிக்கொண்டிருந்தார். அப்போது கற்றது தமிழ் படத்தை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு அங்காடி தெரு படத்திற்கு அஞ்சலியை தேர்வு செய்தார். அந்த படத்தில் விற்பனை பெண்ணாக நடித்த நடிகை அஞ்சலி நேரடியாகவே பல துணிக்கடைகளுக்கு சென்று சேல்ஸ் பெண்களிடம் பல விஷயத்தை கேட்டு தெரிந்து கொண்டார்.

நடிகை அஞ்சலி: இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அஞ்சலி ஜெய்யுடன் சேர்ந்து எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தார். அந்த படத்தில் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்தது. இதையடுத்து இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இருவர் குறித்து பரவிய தகவல் குறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஆந்திராவில் தஞ்சம்: மேலும், சித்தியின் கட்டுப்பாட்டில் இருந்த அஞ்சலி அவரிடம் பல கொடுமையை அனுபவித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் மன விரக்தி அடைந்த அஞ்சலி சினிமாவே வேண்டாம் என்று சினிமாவை விட்டு விலகி ஆந்திராவிற்கே சென்றார். தற்போது தெலுங்கு தயாரிப்பாளர் உதவியுடன் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகை அஞ்சலி ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

அஞ்சலி சொன்ன உண்மை: இந்நிலையில்,தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அஞ்சலி, இணையத்தில் வலம் திருமண வதந்தி குறித்து பேசி உள்ளார். அதில், நடிகர் ஜெய்யை காதலித்ததாக செய்தி வலம் வந்தது. சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்னை பற்றி எழுத வேண்டும்? யாருடன் என்னை இணைத்து எழுத வேண்டும் என்று அவர்களே முடிவு செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டேன் என்ற செய்தியும் வெளியாகியது. அந்த செய்தியைப்பார்த்து நான் சிரித்தேன். எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் நடந்துவிட்டது. இதுபோல ஒரு நடிகையாக இருப்பதால் அவர் பற்றி வாய்க்கு வந்ததை, உண்மைக்கு புறம்பாக எழுதுகிறார்கள் என்று நடிகை அஞ்சலி தன் வேதனையை அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X