என்னோட குழந்தைகளைவிட அது முக்கியமில்லைனு சொன்ன ஏஞ்சலினா ஜூலி.. 10 வருஷமா அது இல்லையாம்

சென்னை: உலக சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் ஒன்றாக நீண்ட காலம் பேசப்பட்டவர்களில் பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோலி ஜோடிக்கு எப்போதும் தனி வரவேற்பும் கவனமும் உள்ளது. காதலித்து ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி, திருமணம் செய்து கொண்டாலும் பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தது உலகம் முழுவதும் அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில், காதல், குடும்ப வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்து ஏஞ்சலினா ஜோலி கூறியிருந்த கருத்துகள் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிராட் பிட்டும் ஏஞ்சலினா ஜோலியும் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த காலகட்டத்தில் இருவரும் ஹாலிவுட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஜோடியாக வலம் வந்தனர். இவர்களுக்கு பிறந்த குழந்தைகளுடன், தத்தெடுத்த குழந்தைகளையும் இணைத்து பெரிய குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். இது மட்டும் இல்லாமல் பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் அவர்கள் செய்து வந்தனர். அதற்கும் பாராட்டுக்கள் குவிந்து வந்தது.

நீண்ட காலம் இணைந்து வாழ்ந்த பிறகே 2014-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடுகள், குடும்ப பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களால் இரண்டே ஆண்டுகளில் அதாவது, 2016-ஆம் ஆண்டு ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். இது பலருக்கும் மனதில் இடியை இறக்கிய தகவலாக இருந்தது. அதன் பின்னர் இருவருக்கும் இடையேயான சட்டப் போராட்டம் பல ஆண்டுகள் நீடித்து சர்வதேச ஊடகங்களில் தொடர்ந்து செய்தியாக வெளியானது.

Angelina Jolie Reveals Why She Hasn t Dated in 10 Years My Children Come First

இந்த நிலையில், இவர்களின் விவாகரத்திற்குப் பின்னர் வேறு யாருடனும் டேட்டிங் செய்யவில்லையா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. இது தொடர்பான கேள்விக்கு, நடிகை ஏஞ்சலினா ஜோலி சொன்ன பதில்தான் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதாவது, " கடந்த 10 ஆண்டுகளாக நான் யாருடனும் டேட்டிங் செய்யவில்லை. எனக்கு அது முக்கியத்துவமானதாகவும் படவில்லை. எனக்கு எனது குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது. நான் ஒரு அம்மாவாக அதில் கவனம் செலுத்தி வருகிறேன். எனது குழந்தைகளை பாராமரிப்பதை கணக்கில் கொள்ளும்போது எனது தனிப்பட்ட காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்க மனம் இடம் தரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X