இடுப்பு தெரிய கிளாமர் போட்டோ ஷுட்.. இணையத்தை தெறிக்கவிடும் குட்டி நயனின் க்யூட் போட்டோஸ்!
சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் இடுப்பு தெரிய நடத்தியிருக்கும் கிளாமர் போட்டோ ஷுட் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுடன் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

நயனுக்கு மகள்
ஏராமான விருதுகளையும் குவித்துள்ளார் அனிகா சுரேந்திரன். இவர் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்தார். இதேபோல் நானும் ரவுடிதான் படத்தில் சிறுவயது நயன்தாராவாக நடித்தார். அதேபோல் விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்தார்.

குட்டி நயன்
இதனால் அந்த படங்கள் வந்தது முதலே அஜித் ரசிகர்கள் அவரை அஜித்தின் ரீல் மகள் என்றும் நயன்தாராவின் ரசிகர்கள் அவரை குட்டி நயன்தாரா என்றும் அழைத்து வருகின்றனர். இதுவரை குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது குமரிப் பெண்ணாகிவிட்டார்.

குட்டி பாப்பாவா?
அந்த குட்டிப் பாப்பாவா இது என பிரமிக்கும் வகையில் உள்ளார் அனிகா. ஹீரோயின் கனவில் உள்ள அனிகா, அதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளது என்பதை வெளிக்காட்டும் வகையில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

இடுப்பு தெரிய
ட்ரெடிஷ்னல், மாடர்ன் என்றில்லாமல் அனைத்திலும் கலந்து கட்டி கலக்கி வருகிறார். சேலை, பாவாடை தாவணி, ஸ்ட்ராப்லெஸ் கவுன் என ஹீரோயின்களுக்கு சமமாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது லெஹெங்கா அணிந்து இடுப்பு தெரிய கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

வில் அம்புடன்
கழுத்து நிறைய நகை, கை நிறைய வளையல், கொண்டை, கொண்டையில் பூ என அசத்தலாக உள்ளார் அனிகா. மேலும் நீண்ட கவுன் அணிந்துள்ள அனிகா கையில் வில் அம்புடன் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











