ஹீரோயினான குட்டி நயன்.. பிறந்தநாளில் ஃபிரண்ட்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: குழந்தை நட்சத்திரமான அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள நிலையில் அவருக்கு அவரது நண்பர்கள் கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரேன். பல மலையாள படங்களில் குழந்தையாக நடித்துள்ளார்.

தொடர்ந்து அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். தொடர்ந்து மிருதன், நானும் ரவுடிதான் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

குட்டி நயன்தாரா

குட்டி நயன்தாரா

இதில் நானும் ரவுடிதான் படத்தில் இளம் வயது நயன்தாராவாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு மகளாகவும் நடித்தார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா தற்போது குமரிப் பெண்ணாகி விட்டார்.

வித வித போட்டோ ஷுட்

வித வித போட்டோ ஷுட்

அடுத்து ஹீரோயினாகதான் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள அனிகா கடந்த சில மாதங்களாக முழு மூச்சுடன் அசத்தல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வந்தார். முன்னணி ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர், ஹோம்ளி என விதவிதமாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி ரகளை செய்து வந்தார்.

அடுத்த நயன்

அடுத்த நயன்

அவரது கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலேயே இவ்வளவு கிளாமரா என பிரமித்தனர். சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் கூட செய்தனர். இன்னும் சிலர் அடுத்த நயன்தாரா நீங்கள்தான் என அவரது அழகை வர்ணித்தனர்.

கப்பேலா படத்தில் ஹீரோயின்

கப்பேலா படத்தில் ஹீரோயின்

அவர் நடத்திய போட்டோ ஷுட்டுக்கும், கிளாமருக்கும் பலன் கிடைத்து விட்டது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனிகா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது.

சர்ப்ரைஸாக செலிபிரேட்

சர்ப்ரைஸாக செலிபிரேட்

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று அனிகா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அனிகாவின் நண்பர்கள் அவரது பிறந்த நாளை சர்ப்ரைஸாக செலிபிரேட் செய்தனர்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

அந்த வீடியோவில் கதவை திறந்துகொண்டு அனிகா உள்ளே வந்ததுமே கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர். பிறந்த நாளை முன்னிட்டு அவரது நண்பர்கள் கொடுத்த சர்ப்ரைஸை பார்த்த அனிகா திக்குமுக்காடி போகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X