அனிகா சுரேந்திரன் வெளியிட்ட க்யூட் வீடியோ.. செம அழகா இருக்காங்களே
சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தமிழில் அவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமடைந்தார். அதனையடுத்து விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்தார். இப்போது ஹீரோயினாகவும் நடித்துவரும் அவர்; தனுஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். கடைசியாக PT சார் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் அவர் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது..
மலையாள சினிமா துறையில் தனது கரியரை தொடங்கிய அனிகா' தமிழில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அறிமுகமானவர் அனிகா. அதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது. குறிப்பாக க்ளைமேக்ஸில் அவருக்கும், அஜித்துக்குமான காட்சி பலரையும் கலங்க வைத்தது. முக்கியமாக விஸ்வாசம் படத்திலிருந்து அனிகாவை பலரும் குட்டி நயன்தாரா என்றே அழைக்கிறார்கள்.

ஹீரோயின்: தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா புட்டபொம்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனையடுத்து மலையாளத்திலும் ஹீரோயினாக களமிறங்கிய அவர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்தார். படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே அனிகா ஓவர் கவர்ச்சி காட்டியிருக்கிறார் என கூறப்பட்டது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகளா இது என வாயை பிளந்தனர்.
கவர்ச்சி காட்டினாலும் படத்தின் கதையில் பல சிக்கல்கள் இருந்ததன் காரணமாக ஓ மை டார்லிங் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதனையடுத்து அவர் தற்போது சில மலையாள படங்களில் நடித்துவருகிறார். அதேபோல் தமிழில் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50ஆவது படமான ராயன் படத்திலும் முக்கியமான ரோலில் அனிகா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் இயக்கத்தில்: இதற்கிடையே தமிழிலும் ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்திருக்கும் அவர் தனுஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. படத்தின் சிங்கிள் பாடலும் சூப்பர் ஹிட். கண்டிப்பாக இந்தப் படம் தனக்கு பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் அனிகா. மேலும் கடைசியாக PT சார் என்ற படத்தில் நடித்திருந்தார் அனிகா. படம் போதிய வரவேற்பை பெறவில்லை.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: படங்களில் அவர் படு பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ்வாக இருப்பார் அனிகா. அதில் தனது புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி பகிர்வது வழக்கம். அந்தவகையில் அனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். மாடர்ன் ட்ரெஸ்ஸில் செம க்யூட்டாக இருக்கும் அவரைப் பார்த்த ரசிகர்கள், அனிகா செம க்யூட்டா இருக்காங்களே என சொல்லி அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











