பட்டாசு வெடித்து பட்டையை கிளப்பும் குட்டி நயன்தாரா.. விட்டா நயனுக்கு தங்கச்சியா நடிப்பாங்க போல!

சென்னை: குழந்தை நட்சத்திரத்தில் இருந்து இளம் நடிகையாக மாறியுள்ள அனிகா சுரேந்திரனின் தீபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

குட்டி நயன் என ஒரு மில்லியன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அனிகா சுரேந்திரன் மத்தாப்பை கையிலும், சிரிப்பை உதட்டிலும் வைத்தபடி தேவதை போல கொடுத்த போஸ் வைரலாகி வருகிறது.

தீபாவளி நல்வாழ்த்துக்களுடன் லைக்குகளும் லட்சக் கணக்கில் குவிந்து வருகின்றன.

மாடலிங்கில் ஆர்வம்

மாடலிங்கில் ஆர்வம்

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பாராட்டுக்களை குவித்து வந்த அனிகா சுரேந்திரன், தற்போது குமரியாக மாறி விட்டார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழை மரமாக

வாழை மரமாக

பாப்புலர் போட்டோகிராபர் மகாதேவன் தம்பி, அனிகா சுரேந்திரனை வாழை மரமாகவே மாற்றிய போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் ஹிட் அடித்தது. வாழை இலை, வாழைப்பூ என செம ஹாட்டாக அனிகா அந்த புகைப்படத்தில் மாறி இருந்து, ஏகப்பட்ட ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறினார்.

செலிபிரேஷன் மோட்

செலிபிரேஷன் மோட்

பண்டிகை வந்துவிட்டாலே கலக்கலாக போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கி வருவதை சமீப காலமாக ஃபேஷன் ஆக்கி வருகிறார் இந்த குட்டி நயன்தாரா. ஓணம் ஸ்பெஷலாக அனிகா சுரேந்திரன் வெளியிட்ட அசத்தலான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேரழகில் மயங்கி ஸ்தம்பித்து போனார்கள்.

மத்தாப்பும் சிரிப்பும்

மத்தாப்பும் சிரிப்பும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்தாப்பு கொளுத்தி அனிகா சுரேந்திரன் வெளியிட்டுள்ள படு மாஸான புகைப்படம், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. கருப்பு நிற சுடிதார் அணிந்து கொண்டு, கைகளில் மத்தாப்பும், உதட்டில் சிரிப்பும் கொண்டு இருக்கும் அழகு அனிகாவை வாயாற பாராட்டி வருகின்றனர்.

நயனுக்கு தங்கச்சியாக

நயனுக்கு தங்கச்சியாக

நயன்தாராவின் ஜூனியர் வெர்ஷனாகவே மாறி வருகிறார் அனிகா சுரேந்திரன். பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடிதான் மற்றும் விஸ்வாசம் படங்களில் நயனுக்கு மகளாகவும், சின்ன வயது நயனாகவும் நடித்த அனிகா, இப்போ அப்படியே நயன்தாராவுக்கு ஒரு தங்கை இருந்தால் எப்படி இருப்பாரோ அதே போல, இருக்கிறார். சீக்கிரமே நயனுக்கு தங்கை ரோல் வச்சா, அனிகாவுக்கு அந்த ரோல் கொடுக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X