அஜித்தின் ரீல் மகள் அதிரடி.. இனிமே ஹீரோயின் தான்.. மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமாகும் அனிகா?

சென்னை: குழந்தை நட்சத்திரமாக கலக்கி வரும் அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அஜித்துக்கு ரீல் மகளாக நடித்தவர் இவர்.

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான குயின் வெப்சீரிஸில் நடித்தும் கலக்கி இருந்தார்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

2007ம் ஆண்டு வெளியான மலையாள படமான சோட்டா மும்பை படத்தில் நடித்திருந்தாலும், தனது அதிகாரப்பூர்வ அறிமுக படமாக 2010ம் ஆண்டு வெளியான கதா துடருனு படத்தில் நடித்து பிரபலமானார் குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். தொடர்ந்து மலையாளத்தில் 9 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னரே, தமிழில் அறிமுகமானார்.

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அனுஷ்கா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா சுரேந்திரன் நடித்து இருந்தார். "உனக்கென்ன வேணும் சொல்லு" பாடலில் அனிகாவுக்கும் அஜித்துக்கும் அப்படியொரு அப்பா மகள் கெமிஸ்ட்ரி அட்டகாசமாக பொருந்தியது குறிப்பிடத்தக்கது.

இளம் வயது நயன்தாரா

இளம் வயது நயன்தாரா

மீண்டும் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நயனின் மகளாக நடித்த அனிகா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான நானும் ரவுடி தான் படத்தில் இளம் வயது காதம்பரியாக நடித்து அசத்தினார்.

மீண்டும் அஜித்துடன்

மீண்டும் அஜித்துடன்

அஜித்தின் ரீல் மகள் என்ற பட்டப் பெயரோடே தமிழ் திரையுலகில் வலம் வரும் நடிகை அனிகா சுரேந்திரன், கடந்த ஆண்டு அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான மெகா பிளாக்பஸ்டர் திரைப்படமான விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து இருந்தார். கண்ணான கண்ணே பாடல் மீண்டும் அஜித், அனிகா பாச பந்தத்தை மீட்டெடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

குட்டி குயின்

குட்டி குயின்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து புனைவாக எடுக்கப்பட்ட குயின் வெப்சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் லீடு ரோலில் நடித்து இருந்தார். அவரது இளம் வயது கதாபாத்திரத்தில் அனிகா சுரேந்திரன் நடித்து, தன்னால் லீடு ரோலிலும் அசத்த முடியும் என்று நிரூபித்து இருந்தார். அவரது மா ஷார்ட் பிலிமும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயினாக

ஹீரோயினாக

இந்நிலையில், தற்போது மலையாளத்தில் ஹீரோயினாக அனிகா சுரேந்திரன் அறிமுகமாக உள்ளதாக ஒரு ஹாட் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவி கதாபாத்திரம் என்பதால், அனிகா சுரேந்திரனுக்கு அந்த கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் என்றும், மலையாள திரையுலகில் 15 வயதில் ஹீரோயினாக அவர் அறிமுகமாக இது தான் சரியான நேரம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X