புடவையில் போஸ் கொடுக்கும்..சாமுராய் அனிதா!
சென்னை : சாமுராய் அனிதா புடவையில் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பாலிடிவ் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
பெண்கள் அதிக ஆண்டுகள் சினிமா துறையில் நிலைத்து இருப்பது மிகவும் கடினமான ஒன்று. அதையும் தாண்டி சிலர் மட்டுமே வெள்ளித்திரையில் நிலைத்து நிற்கின்றனர். ஆனால் பலர் தன் திருமணத்திற்கு பிறகு வெள்ளித்திரை கை கொடுக்கவில்லை என்றால் சின்னத்திரைக்குக்கு வந்துவிடுவார்கள். தனது மார்க்கெட் சரிந்து விடும் என்பதற்காக சில முன்னணி நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமல் கூட இருக்கின்றனர் .

வருஷமெல்லாம் வசந்தம் படம் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகம் ஆனவர் தான் அனிதா அனிதா ஹஸானந்தினி,,கடந்த 20 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், விக்ரமுடன் சாமுராய் படத்தில் நடித்ததன் மூலமாகத்தான் நாம் அனைவருக்கும் தெரிந்த முகமானார். அந்த படத்தில் வரும் பாடல் ஆகாயசூரியனை என்ற பாடல் இவரை மேலும் பிரபலமாக்கியது. தமிழில் சிலப்படங்களே நடித்த இவர் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ,பஞ்சாபி போன்ற பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அனிதா. திருமணத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் சரியான அமையாததால் இவர் , பல முன்னணி தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து வெளுத்து வாங்கியிருக்கிறார். தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் நாகினி 4 இல் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூகவலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் பல பல டிக்டாக் க்குகளை செய்து பதிவிட்டு வருகிறார். அதில் அவர் செய்யும் ரகளைகள் செம்ம ரீச் என்றே சொல்லலாம். சமீபத்தில் அவர் புடவை கட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சாமுராயில் பார்த்ததைவிட இன்னும் அழகாகவே இருக்கிறார்.

சாமுராய் படத்தில் குண்டாக கொஞ்சம் பப்ளி பேஸ்சுடன் இருக்கும் அனிதா இந்த புகைப்படத்தில் அப்படி இல்லை என்றாலும் மிகவும் அழகாக இருக்கிறார். மேலும், புடவைகளை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும், நாளையும் புடவை அணியப்போவதாகவும் அவர் பதிவிட்டு உள்ளார். அதனை பார்க்கும் ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











