எந்திரன் ஐஸ்வர்யா ராயான அனிதா சம்பத்.. பிக் பாஸ் ஜோடிகள் கிராண்ட் ஃபினாலேவில் அட்டகாசமான நடனம்!

சென்னை: பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலேவை நெருங்கி விட்டது.

கிராண்ட் ஃபினாலேவுக்காக எந்திரன் பட பாடலான 'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது' பாடலுக்கு ஷாரிக் மற்றும் அனிதா சம்பத் இணைந்து அசத்தலாக நடனமாடும் பிக் பாஸ் ஜோடிகள் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அனிதா சம்பத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் பட்டத்தை அவர் வெல்வாரா என்பதை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அடுத்த பிக் பாஸ் ஆரம்பிக்கப்போகுது

அடுத்த பிக் பாஸ் ஆரம்பிக்கப்போகுது

பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலேவை எட்டி உள்ளது. அடுத்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியே ஆரம்பிக்க உள்ள நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் கிராண்ட் ஃபினாலேவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மீண்டும் ஓவியா

மீண்டும் ஓவியா

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கிய நடிகை ஓவியா அதற்கு பிக் விஜய் டிவியுடன் ட்விட்டரில் சண்டை போட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொண்டுள்ளார்.

லாஸ்லியா நடனம்

லாஸ்லியா நடனம்

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியாவுக்கு ஏகப்பட்ட படங்களில் ஹீரோயின் வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், நடிகையாக மாறியுள்ள லாஸ்லியாவும் இந்த கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொண்டுள்ளார். இந்த வாரம் வெளியான லாஸ்லியாவின் பிரண்ட்ஷிப் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. நிகழ்ச்சியில் லாஸ்லியாவும் ஒரு பக்காவான டான்ஸ் ஆடியுள்ளார்.

சிரிப்பழகி ரம்யா

சிரிப்பழகி ரம்யா

நடிகை ரம்யா பாண்டியனின் புதுப்படமான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், அவரும் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொண்டுள்ளார். இந்த மூன்று நடிகைகள் கலந்து கொண்ட புரமோவும் வேற லெவலில் வைரலானது.

ஐஸ்வர்யா ராயான அனிதா

ஐஸ்வர்யா ராயான அனிதா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டஃப் போட்டியாளராக இருந்த செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் கிராண்ட் ஃபினாலேவில் எந்திரன் படத்தில் இடம்பெற்ற 'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது' பாடலுக்கு ஷாரிக் உடன் அட்டகாசமான நடனத்தை ஆடியுள்ளார். அதன் புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

எக்ஸ்பிரஷனே இல்லை

எக்ஸ்பிரஷனே இல்லை

ஷாரிக் அப்படியே ரோபோ போலவே மாறிவிட்டார். எந்தவொரு எக்ஸ்பிரஷனும் இல்லை என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதே சமயம் அனிதா சம்பத் சிரித்தபடியே நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஆடும் ஆட்டத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஸ்கேட்டிங் டான்ஸ்

ஸ்கேட்டிங் டான்ஸ்

மோட்டார் ஸ்கேட்டிங்கில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் ஸ்டேஜுக்குள் வருவது தொடங்கி பல மூவ்மெண்ட்களை அந்த ஸ்கேட்டிங்கை பயன்படுத்தியே செய்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரசிக்கும் ராஜமாதா

ரசிக்கும் ராஜமாதா

அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் வித்தியாசமான முயற்சியில் எந்திரன் பட பாடலுக்கு நடனமாடுவதை கண்டு ரம்யா கிருஷ்ணன் ரொம்பவே ரசிப்பது போல புரமோவில் காண்பிக்கின்றனர். இன்றைய போட்டியில் ராஜமாதா யாருக்கு வெற்றி மகுடத்தை சூட்டப் போகிறார் என்பதை காண அனைவரும் வெயிட்டிங்கில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X