»   »  அஞ்சலி, அஞ்சலி, அஞ்சலி!

அஞ்சலி, அஞ்சலி, அஞ்சலி!

Subscribe to Oneindia Tamil

ஜீவாவுக்கு ஜோடியாக கோலிவுட் களம் இறங்குகிறார் புத்தம் புதுசாக ஜொலிக்கும் புதுமுகம் அஞ்சலி.

ஈ படத்தைத் தொடர்ந்து ஜீவா நடிக்கவுள்ள படம் தமிழ் எம்.ஏ. படத்தின் பெயரே வித்தியாசமாகஇருக்கில்லையா.?

ஆனால் இப்படத்தில் ஜீவா போடப் போகும் வேடங்கள் அத்தனையும் படு வித்தியாசமாம். முற்றிலும் புதியகெட்டப்புடன் ஜீவா இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

ஈ படத்தின் வெற்றி ஜீவாவுக்கு ரொம்பவே சந்தஷோம் கொடுத்திருக்கிறதாம். இனிமேல் நடித்தால்வித்தியாசமான கேரக்டர்கள்தான் நடிக்கணும் என்ற முடிவை எடுத்துள்ளாராம் ஜீவா. அடுத்ததாக ஒரு அவார்டுபடத்தில் நடிக்கப் போகிறாராம் ஜீவா.

தமிழ் எம்.ஏ. படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அனுபமா என்பவருக்கு ஆஃபர் கொடுத்திருந்தனர். அனுபமாவும்,அடடா, முதல் படத்திலேயே ஜீவாவா என்று ரொம்பவே ஜில்லாகிப் போய், கேமராவுக்கு போஸ் கொடுத்தார்காத்திருந்தார்.

ஆனால் அனுபமாவின் நேரமோ, என்னவோ இவரோட லுக்கும், கெட்டப்பும் கதைக்குப் பொருத்தமாகஇல்லையோ என்று சிலர் அட்வைஸ் செய்ய, யோசித்துப் பார்த்து விட்டு அனுபமாவுக்கு கல்தா கொடுத்துவிட்டனர்.

இப்போது அனுபமாவுக்குப் பதில் அஞ்சலி என்பவரை ஹீரோயினாக்கியுள்ளனர். படு ஜொலி ஜொலிப்பாகஇருக்கும் அஞ்சலி மாடலிங்கில் இருந்தவர். டிவியில் ஏகப்பட்ட சேலை விளம்பரங்களுக்கு போஸ்கொடுத்துள்ளார்.

படத்தின் கதைக்கு அஞ்சலி அசத்தலாக பொருந்தி வருவதாக இப்போது பெரும்பாலானவர்கள்தெரிவித்துள்ளதால் நமக்கு கல்தா கிடைக்காது என்ற நம்பிக்கையில் உள்ளார் அஞ்சலி.

ஆளை மாத்தினாலும், பேரை மாத்தினாலும் நடிப்பு அதுவாத்தான் வரணும். அஞ்சலிக்கு எப்படியோ?

Read more about: anjali in tamil ma

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil