Anjali: அந்த மாதிரி இருந்தால் பிடிக்காது... ஆனால் எனக்கு ரெண்டுமே வேண்டும்... அஞ்சலி ஓபன் டாக்
சென்னை: தமிழ், தெலுங்கு மொழிகளில் முக்கியமான நடிகையாக வலம் வருகிறார் அஞ்சலி.
மலையாளத்தில் அஞ்சலி நடித்த இரட்டா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் கேம் சேஞ்சர் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் அஞ்சலி.
இந்நிலையில், தனது திருமணம், சினிமா கேரியர் குறித்து அஞ்சலி பேசியது வைரலாகி வருகிறது..

வருங்கால கணவர் குறித்து அஞ்சலி:தெலுங்கில் 2006ம் ஆண்டு வெளியான போட்டோ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி. தமிழில் 'கற்றது தமிழ்' படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஞ்சலி, அங்காடித் தெரு படத்தில் நடித்த பின்னர் படு பிஸியாகிவிட்டார். தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை ஆகிய படங்கள் நல்ல ரீச் கொடுத்தன.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிஸியாக நடித்து வந்த அஞ்சலி, நடிகர் ஜெய்யை காதலிப்பதாக சொல்லப்பட்டது. இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால், ஒருகட்டத்தில் அஞ்சலி - ஜெய் இருவருமே பிரிந்துவிட்டனர். அதன்பிறகு தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிஸிலும் நடித்து வரும் அஞ்சலி, சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது கேரியர் குறித்தும் திருமணம் பற்றியும் பேசியிருந்தார். அதாவது ஒரு ரிலேஷன்ஷிப்பில் மரியாதை ரொம்ப முக்கியம். அதன்பிறகு தான் அன்பு, காதல் எல்லாமே. அப்படியொரு மரியாதை இல்லையென்றால் அந்த உறவே எனக்கு தேவையில்லை எனக் கூறியுள்ளார்.

அதேபோல் கேரியரா அல்லது நல்ல உறவு இந்த இரண்டில் ஒன்றை தேர்வுசெய்ய சொன்னால் எனக்கு இரண்டுமே முக்கியம் தான் என குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு ஆண்கள் வேலைக்கு செல்வது போல பெண்களாலும் செல்ல முடியும். சில நடிகைகள் திருமணமாகி குழந்தைகளை பெற்ற பிறகும் படங்களில் நடித்து வருகிறார்கள் என அஞ்சலி கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்திடாத அஞ்சலி, வெப் சீரிஸ்களில் படுகிளாமராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 36 வயதான போதும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருப்பதால், அஞ்சலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது தனது சினிமா கேரியர், கணவர் குறித்து அதிரடியாக பேசி ட்ரெண்டிங் வந்துவிட்டார் அஞ்சலி.


Click it and Unblock the Notifications











