இழந்த சொத்துக்களை மீட்க நடிகர் சங்கத்தை நாடும் அஞ்சலி!

அஞ்சலி நடிக்க ஆரம்பித்ததிலிருந்து அவர் பெற்ற சம்பளம், வாங்கிய சொத்துகள் முழுவதையும் சித்தியிடம்தான் கொடுத்து வந்தாராம். இயக்குநர் களஞ்சியம் இவரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம்.
இந்த இருவரையும் மீறி வெளியில் வந்த அஞ்சலி, இனி சுதந்திரமாக இருப்பேன் என அறிவித்துவிட்டார்.
இப்போது தெலுங்குப் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வரும் அஞ்சலி, வரும் 24-ம் தேதிக்குப் பிறகு சென்னை வருகிறார்.
தனது சொத்துக்களை சித்தி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து மீட்டுத் தருமாறு கேட்கப் போகிறாராம். இதுகுறித்து சங்கத் தலைவர் சரத்குமாரிடம் பேசியதாகவும், அவரும் நிச்சயம் உதவுகிறோம் என வாக்களித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அஞ்சலிக்கு இப்போது பெரும் உதவியாகவும் ஆதரவாகவும் இருப்பது தெலுங்கு பட அதிபர் ஒருவர்தானாம்.
Comments


Click it and Unblock the Notifications