Anjali Net worth: இத்தனை படங்கள் நடித்தும் அஞ்சலி சொத்து மதிப்பு இவ்வளவு தானா..? அட பாவமே!

சென்னை: முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனையடுத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிஸியாக நடித்து வரும் அஞ்சலியின் சொத்து மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.

அதேபோல், ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் பற்றியும் இப்போது பார்க்கலாம்.

 Anjali Birthday: Actress Anjalis Salary Net worth and cars details

அஞ்சலியின் மொத்த சொத்து மதிப்பு: 2006ம் ஆண்டு வெளியான போட்டோ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. தமிழில் 'கற்றது தமிழ்' படத்தில் ஆனந்தியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து அங்காடித் தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் அஞ்சலி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல், வெப் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

அஞ்சலி ஒரு படத்திற்காக 80 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். சினிமா தவிர வெப் சீரிஸ், விளம்பரங்கள், கடை திறப்பு நிகழ்ச்சிகள் என பல வகைகளிலும் வருமானம் ஈட்டுகிறாராம். இதனால், மாதம் 5 முதல் 7 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. மொத்தமாக ஒரு ஆண்டுக்கு 85 முதல் 90 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.

 Anjali Birthday: Actress Anjalis Salary Net worth and cars details

அதேபோல் அஞ்சலி சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பின்னர் இதுவரை 10 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளாராம். இதில், ஹைதராபாத்தில் 2 கோடி மதிப்பிலான ஒரு பிளாட்டும், சென்னையில் ஒரு பிளாட்டும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வீடுகள் தவிர அவருக்கு பெரியதாக சொத்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தனது மேக்கப், ட்ரெஸ் போன்றவைகளுக்காக ஆண்டுக்கு பல லட்சங்கள் வரை செலவு செய்கிறாராம்.

வீடுகள் தவிர அவரிடம் ஒரு ஆடி காரும், BMW காரும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கேரியரா அல்லது நல்ல உறவா இந்த இரண்டில் ஒன்றை தேர்வுசெய்ய சொன்னால் எனக்கு இரண்டுமே முக்கியம் தான் என சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X