ஆந்திராவிலும் வாய்ப்பு லேது... அதிர்ச்சியில் அஞ்சலி!
தமிழ் சினிமாவில் இனி நடிப்பதாக இல்லை என்று கூறிவிட்டு ஆந்திரா பக்கம் ஒதுங்கிய அஞ்சலி, குறுகிய காலத்திலேயே அங்கும் வாய்ப்பை இழந்து தடுமாறும் நிலைக்கு வந்துவிட்டார்.
நடிகை அஞ்சலி தன் சித்தியுடனான கருத்து வேறுபாடு காரணமாக ஆந்திராவில் அடைக்கலமானார். அப்போது அவருக்கு தமிழில் நல்ல மார்க்கெட். முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார்.

ஹைதராபாத் போய் நிலைமை சகஜமான பிறகும் அவர் சென்னைப் பக்கம் வரவில்லை. தன் வீட்டை சித்தி அபகரித்துக் கொண்டதாலும், உயிருக்குப் பாதுகாப்பாற்ற நிலை இருப்பதாலும் தமிழில் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.
மேலும் தான் இருக்கும் இடத்தையும் கூட யாருக்கும் தெரிவிக்கவில்லை. சுந்தர் சி படம், ராகவா லாரன்ஸ் படம் போன்றவற்றில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்தார்.
இந்த நிலையில் அஞ்சலியின் உடலும் பருமனாக ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அஞ்சலியின் உப்பிப் போன முகத்தையும், பருத்த உடலையும் பார்த்து திரையுலகினர் அதிர்ந்து போனார்களாம்.

இப்போதைக்கு தெலுங்கில் ஒரு படம் கூட கைவசம் இல்லை அஞ்சலிக்கு. அவரது இப்போதைய தோற்றத்தால், வாய்ப்பு தரவும் யோசிக்கிறார்களாம் ஆந்திர திரையுலகினர். எனவே மீண்டும் தமிழில் வாய்ப்பு தேட முடிவு செய்துள்ள அவர், அதற்கு வசதியாக சித்தியிடமிருந்து வீட்டைப் பெற முயற்சித்து வருகிறார்.
தமிழில் விஷாலுடன் அவர் நடித்த மதகஜராஜா மட்டுமே இப்போது வெளியாக வேண்டிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











