twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    க்யூட்டா பேட்டை புடிச்சு..கிரிக்கெட் விளையாடிய நடிகை அஞ்சலி..ரசித்து பார்க்கும் பேஃன்ஸ்!

    |

    சென்னை : நடிகை அஞ்சலி கிரிக்கெட் விளையாடும் வீடியோவை அவரது ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர்.

    ஜீவா நடித்த கற்றதுதமிழ் என்ற திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்தவர் அஞ்சலி.

    மாநிறமாக இருக்கும் அஞ்சலி பக்கத்து வீட்டுபெண்போல இயல்பாக இருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய் விட்டது.

    யார் நண்பர்..யார் எதிரி.. நினைவை இழந்த பெண்ணாக நடிகை அஞ்சலி.. ஃபால் புதிய வெப் தொடர்!யார் நண்பர்..யார் எதிரி.. நினைவை இழந்த பெண்ணாக நடிகை அஞ்சலி.. ஃபால் புதிய வெப் தொடர்!

    நடிகை அஞ்சலி

    நடிகை அஞ்சலி

    அங்காடித் தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்திருந்தார் அஞ்சலி. அந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி பக்காவாக இருந்தது. இதையடுத்து, இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இது குறித்து இருவரும் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

    தமிழில் பட வாய்ப்பு இல்லை

    தமிழில் பட வாய்ப்பு இல்லை

    தமிழில் வாய்ப்பு குறைத்தால் தெலுங்கிற்கு சென்று ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த அஞ்சலி, படவாய்ப்பு குறைந்ததால், கவர்ச்சிக்கு மாறினார். நான்கு இயக்குநர்களின் இயக்கத்தில் உருவான பாவக்கதைகள் அந்தாலஜியில் விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்றனும் என்ற பகுதியில், லெஸ்பியனாக நடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் அரைகுறை ஆடையில் மெத்தையில் போஸ், லிப் லாங் என உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.

    RC15 திரைப்படத்தில்

    RC15 திரைப்படத்தில்

    தற்போது, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல், சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில், தெலுங்கு படம் ஒன்றில் இடம் பெறும் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். இந்த பாடலுக்கு பின் அஞ்சலிக்கு பட வாய்ப்பு ஏகத்திற்கும் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரசித்து பார்க்கும் பேஃன்ஸ்

    ரசித்து பார்க்கும் பேஃன்ஸ்

    இந்நிலையில், படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வில் இருக்கும் அஞ்சலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ஆத்தாடி என்னமா விளையாடுறீங்க என்றும், சேலையில் கிரிக்கெட்டா என்றும் அந்த வீடியோவை டிராண்டாக்கி வருகின்றனர்.

    English summary
    Actress Anjali cricket played video trending on social media
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X