சித்தியுடன் 'பழம்' விட்டு விட்டாரா அஞ்சலி??
ஹைதராபாத்: தனது சித்தி பாரதிதேவியுடன் சமாதானமாகி விட்டார் நடிகை அஞ்சலி... இதுதான் தெலுங்குத் திரையுலகில் படு சூடாக வலம் வரும் செய்தியாகும்.
ஹைதராபாத்துக்குப் படப்பிடிப்புக்குப் போனஇடத்தில் ஹோட்டலிலிருந்து தடாலடியாக எஸ்கேப் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் அஞ்சலி.
அத்தோடு நில்லாமல், தனது சித்தி பாரதி தேவி குறித்து பரபரப்பு புகார்களையும் அடுத்தடுத்து அடுக்கி பரபரப்பை மேலும் கூட்டினார்.
இந்த நிலையில் தற்போது தனது சித்தியுடன் அஞ்சலி சமாதானமாகி விட்டதாக செய்திகள் வருகின்றன.

பலே நடிப்பில் பலுப்பு
தெலுங்கில் பலுப்பு என்ற படத்தில் நடித்துள்ளார் அஞ்சலி. 2வது நாயகியாக.

ஸ்ருதியுடன் இணைந்து
ஸ்ருதி ஹாசன்தான் இப்படத்தின் முதல் நாயகி. கவர்ச்சியிலும் கலக்கியுள்ளார். நாயகன் ரவி தேஜா.

ஆடியோ விழாவில் புன்னகையுடன் அஞ்சலி
இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் ஹைதராபாத்தில்நடந்தது. அதில் புன்னகையுடன் கலந்து கொண்டார் அஞ்சலி. பார்க்கவும் உற்சாகமாக இருந்தார்.

சித்தியும் வந்தாரா?
இந்த ஆடியோவிழவுக்கு அஞ்சலி சண்டை பிடித்த சித்தி பாரதி தேவியும் வந்திருந்ததாக கூறுகிறார்கள்.

அப்படீன்னா பழமா...?
இதன் மூலம் சித்தியுடன் அஞ்சலி சமாதானமாக போய் விட்டதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

மெளனம் காக்கும் அஞ்சலி
ஆனால் இந்த செய்திகள் குறித்து அஞ்சலி இதுவரை வாய் திறக்கவில்லை. அமைதி காக்கிறார்.


Click it and Unblock the Notifications











