திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாராமே அஞ்சலி?
சென்னை: நடிகை அஞ்சலி திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாக கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் கடந்த இரு தினங்களாக பேச்சு நிலவுகிறது.
கடந்த சில மாதங்களாகவே அஞ்சலி என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமில்லாத பெயராகிவிட்டது.

சித்தி கொடுமை
சித்தி கொடுமை தாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறுவதாகக் கூறி ஹைதராபாத் கிளம்பிய அஞ்சலி, அடுத்த சில தினங்கள் காணாமல் போனார். அப்போதே அவர் யாருடனோ செட்டிலாகிவிட்டார் என்றுதான் கூறப்பட்டது.
ஆனால் அவர் அடுத்த 5 தினங்கள் கழித்து ஹைதராபாத் போலீசில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை, ஓய்வெடுக்க மும்பை போயிருந்தேன் என்றார்.

சம்மனை வாங்கவில்லை
அவரை தேடிக் கொணர சித்தி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு, அவர் மீது இயக்குர் களஞ்சியம் தொடர்ந்த மனு போன்றவற்றின் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்கள் அனுப்பப்பட்டன அஞ்சலிக்கு. ஆனால் எந்த சம்மனையுமே அவர் பெற்றுக் கொள்ளவில்லை.

பிரஸ் மீ்ட்டுக்கும் வரவில்லை
அவர் தமிழில் புதிதாக எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவுமில்லை. தான் நடித்த தமிழ்ப் படங்களின் புரமோஷனுக்கும் இதுவரை வரவில்லை. சமீபத்தில் நடந்த மதகஜராஜா பட பிரஸ் மீட்டுக்கு அவர் வருவார் என்றார்கள். ஆனால் கடைசி வரை வரவே இல்லை.

பிரபல தயாரிப்பு நிர்வாகியுடன் திருமணம்
இந்த நிலையில்தான் அஞ்சலிக்கும் பிரபல தயாரிப்பு நிர்வாகி ஒருவருக்கும் காதல் என்றும், இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்றும் பேச்சு கிளம்பியுள்ளது. இவர்கள் தயாரித்த படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அஞ்சலி.
இந்த தயாரிப்பு நிர்வாகி ஒரு பரபரப்பு அரசியல் தலைவரின் மருமகன் என்கிறார்கள்.

காணாமல் போனதே நாடகம்தானாம்
முன்பு அஞ்சலி காணாமல் போனதாக கூறப்பட்டதே ஒரு நாடகம்தான் என்றும், அந்த தயாரிப்பு நிர்வாகியுடன்தான் அஞ்சலி தங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
திருமணத்துக்குப் பிறகு அஞ்சலி, தமிழகம் பக்கமே தலைகாட்டாமல் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாராம்.

சித்திக்கும் தெரியாதாம்
தமிழ், தெலுங்கு திரையுலகில் அஞ்சலிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் அத்தனை பேருக்கும் அஞ்சலி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லையாம்.
சித்தி பாரதி தேவியுடன் அவர் மீண்டும் சமாதானமாகிவிட்டதாகக் கூறப்பட்டதால் அவரிடம் விசாரித்தோம். எனக்கு எதுவுமே தெரியாது. அவள் விஷயத்தில் நான் தலையிடுவதில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











