நடிகை அஞ்சலி மீண்டும் காணாமப் போயிட்டாராமே!!

By Shankar

தமிழ் சினிமாவிலிருந்தும் சென்னையிலிருந்தும் காணாமல் போய் ஆந்திராவில் வாசம் புரிந்து வந்த அஞ்சலி, அங்கிருந்தும் மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அஞ்சலி, சித்தி கொடுமை என்று புகார் கூறி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையிலிருந்து மாயமானார்.

தன் சித்தி பாரதிதேவி, இயக்குநர் களஞ்சியம் ஆகியோர் மீது சொத்துக்களை அபகரிக்க முயற்சி, துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களைக் கூறினார்.

சென்னைக்கே வரவில்லை

சென்னைக்கே வரவில்லை

சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஹைதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஹைதராபாத்திலேயே தங்கி இருந்தார்.

சென்னையில் நடக்கும் அவர் தொடர்பான வழக்குகள் ஒன்றில்கூட நேரில் ஆஜராகவில்லை.

முன்பு போல் படங்களில் நடிக்கவில்லை. உடல் எடையும் கூடிவிட்டதாகவும், தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.

ஹைதராபாதிலும் இப்போ இல்லையாம்...

ஹைதராபாதிலும் இப்போ இல்லையாம்...

இந்த நிலையில் சமீப காலமாக அஞ்சலியை ஹைதராபாத்திலும் காணவில்லை. எந்த நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை மீண்டும் அவர் மாயமாகி விட்டதாக செய்திகள் பரவி உள்ளன. மொபைல் போன் செயலற்ற நிலையில் உள்ளது.

தெலுங்கு திரையுலகினரால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையாம். சென்னையில் உள்ள அவரது தொடர்பாளர்களும், அஞ்சலியுடன் பேசியே நாளாகிவிட்டது என்கிறார்கள்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருப்பதாக ஒரு தரப்பும், அமெரிக்காவுக்குப் போய்விட்டார் என இன்னும் சிலரும் சொல்கிறார்கள்.

தேடும் படலம்

தேடும் படலம்

ஆனால் எதுவுமே உறுதியான தகவல் இல்லை. எனவே மீண்டும் அஞ்சலியைத் தொடர்ந்து தேடும் படலம் ஆரம்பமாகியுள்ளது. ஹைதராபாத் போலீசில் புகார் தரவும் முடிவு செய்துள்ளனர் அஞ்சலிக்குத் துணையாக ஆந்திராவில் இருந்த சிலர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X