எனக்கு திருமணமாகிவிட்டது என்பது வதந்தி: நடிகை அஞ்சலி
சென்னை: நான் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனக்கு திருமணமாகிவிட்டது என்பது வதந்தி என்று நடிகை நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.
'சேட்டை' படத்திற்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியோடு இணைந்து நடிக்கிறார் அஞ்சலி.
சிலமாதங்கள் காணமல் போய், ஊடகங்கள் பரபரப்பாக தேட, சித்தி ஆட்கொணர்வு மனுபோட கடைசியில் தலையை வெளியில் காட்டினார் அஞ்சலி.
சிங்கம் 2 படத்தில் குத்தாட்டம் போட்டதோடு மீண்டும் காணாமல் போனார். அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார், தெலுங்கு படத் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் அஞ்சலியைப் பற்றிய செய்திகள் சுடச் சுட வெளியாகின.
இந்த செய்திகளுக்கு அஞ்சலி தரப்பில் இருந்து எந்த மறுப்பும் வெளியாகவில்லை. திடீரென்று ஒருநாள் நைட் பார்ட்டியில் ஆட்டம் போட்ட அஞ்சலியின் படம் ஊடகங்களில் வெளியானது.

ஜெயம் ரவியுடன் ஜோடி
இந்த நிலையில் சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவியுடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அஞ்சலி, அந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அஞ்சலி பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

நான் நடிக்கத் தடையில்லை
பல மாதங்களுக்கு பிறகு தமிழில் இப்படத்தில் நடிக்க இருக்கிறேன். எனக்கு தமிழ் திரையுலகில் நடிக்க யாரும் தடை போடவில்லை. தடை போட்டிருந்தால், எப்படி இந்த படத்தில் நடிக்க முடியும்.

காமெடி கதை
சுராஜ் சார் கூறிய கதை எனக்கு பிடித்திருந்தது. எனக்கு ஒரு நல்ல ரீ-எண்ட்ரியாக இப்படம் இருக்கும். இது முழு நீள காமெடி படம். முதல் முறையாக முழு நீள காமெடி ரோலில் நடிக்கிறேன்.

வதந்தி பரப்புகிறார்கள்
நான் யாரையும் கல்யாணம் பண்ணவில்லை. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவி வருகிறது. எப்போது எனக்கு கல்யாணமானது என்று எனக்கே தெரியவில்லை.

இன்னும் நிறைய நடிக்கணும்
எனக்கு நண்பர்கள், சினிமா துறையினர் பலர் துணையாக இருக்கின்றனர். தமிழில் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

களஞ்சியம் பற்றி
களஞ்சியம் இயக்கும் படம் குறித்து இப்போது நான் எதுவுமே பேச முடியாது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது." என்றார்.

இன்னொரு கதாநாயகி
இந்தப் படத்திற்கு அஞ்சலி மட்டுமே நாயகி இல்லையாம். இன்னொரு நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. தமன் இசையமைத்து வரும் இப்படத்தினை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











