செருப்பால அடிப்பீரோ?... ஸ்டண்ட் மாஸ்ட்ர் மீது அஞ்சலி காட்டம்!

By Siva

ஹைதராபாத்: அஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்துள்ள அஞ்சலி அவர் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளாராம்.

புதுமுக இயக்குனர் சஞ்சீவனின் வலியுடன் ஒரு காதல் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் களஞ்சியம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் தனது ஊர்சுற்றி புராணம் படம் பாதியிலேயே நின்றதை பற்றி பேசினார்.

அஞ்சலி ஓடியதால்

அஞ்சலி ஓடியதால்

நடிகை அஞ்சலி திடீர் என்று ஓடிவிட்டதால் எனது ஊர்சுற்றி புராணம் படம் பாதியில் நின்றுவிட்டது. இது குறித்து நான் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட சங்கங்களில் புகார் கொடுத்தும் பலனில்லை என்று கூறி களஞ்சியம் வருத்தப்பட்டார்.

செருப்பால் அடிக்க வேண்டும்

செருப்பால் அடிக்க வேண்டும்

களஞ்சியத்தை அடுத்து பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கூறுகையில், இனி அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்து கொண்டார் என்றால் அவரை செருப்பால் அடிக்கவும் தயங்க மாட்டோம். அஞ்சலி எங்கிருந்தாலும் அவரை கட்டி தூக்கி வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வைப்போம் என்றார்.

அஞ்சலி ஆத்திரம்

அஞ்சலி ஆத்திரம்

ஜாக்குவார் தங்கத்தின் பேச்சு குறித்து கேள்விட்ட அஞ்சலி ஆத்திரம் அடைந்தாராம். எந்த சம்பந்தமும் இல்லாத அவர் எதற்காக என்னை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கடுப்பாகிவிட்டாராம். மேலும் ஜாக்குவார் தங்கம் மீது வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளாராம் அஞ்சலி.

நஷ்டஈடு

நஷ்டஈடு

தன்னால் பாதிக்கப்பட்ட ஊர்சுற்றி புராணம் இயக்குனர் களஞ்சியத்திற்கு ஏதாவது நஷ்டஈடு வழங்கலாமா என்று அஞ்சலி யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X