போலோ உடன் நேரத்தை செலவிடுவது மிகவும் பிடிக்கும்.. படுக்கையறையில் கட்டிப் புரளும் அஞ்சலி!

சென்னை : பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் திரையில் வெளியாகி மிரட்டிய வக்கீல் சாப் திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார் நடிகை அஞ்சலி.

தமிழில் இப்பொழுது பூச்சாண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தான் வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டி போலோ உடன் நேரத்தை செலவிடுவது மிகவும் பிடிக்கும் என படுக்கையில் அதோடு கட்டிப் புரளும் க்யூட்டான புகைப்படங்களில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

தனித்துவமான கதைகளில்

தனித்துவமான கதைகளில்

மிகச் சிறந்த நடிகை கதைக்கு தேவைப்படும் எனில் அதீத கவர்ச்சியை அள்ளி வீசக்கூட தாராள மனம் படைத்தவர் . கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற தனித்துவமான கதைகளில் நடித்து பல விருதுகளையும் தட்டிச் சென்றார். கன்னடம்,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ,கௌதம் மேனன் என முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கி இருந்த பாவக்கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் பண்ணா உட்ரனும் என்ற பகுதியில் அஞ்சலி இரட்டை வேடத்தில் நடித்து பிரமாதப்படுத்தி இருந்தார். இதில் சில சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்திருந்தது மிகப்பெரிய வைரலானது.

லீட் ரோலில்

லீட் ரோலில்

இந்தியில் வெளியான பிங் ஏற்கனவே தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி வாகை சூடிய நிலையில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி அங்கு மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவராக லீட் ரோலில் அஞ்சலி நடித்திருந்தார். இப்பொழுது ஆனந்தபைரவி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மிகவும் பிடிக்கும்

மிகவும் பிடிக்கும்

தமிழில் பூச்சாண்டி படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்லமாக வளர்த்து வரும் போலோ நாய் குட்டியுடன் செம க்யூட்டாக கட்டிப் புரண்டு விளையாடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் போலோ உடன் நேரத்தை செலவிடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் அதில் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Read more about: anjali அஞ்சலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X