நான்கு திருமணங்கள் முடிந்துவிட்டன.. வீட்டில் கவலைப்பட்டார்கள்.. அஞ்சலி கொடுத்த அலப்பறை

சென்னை: நடிகை அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இடையில் சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர், கேங்ஸ் ஆஃப் கோதாவரி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் தனது திருமணம் குறித்து அஞ்சலி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கி ஜீவா நடித்திருந்த அந்தப் படம் கல்ட் க்ளாசிக்காக இன்றுவரை கொண்டாடப்பட்டுவருகிறது. படம் மட்டுமின்றி அதில் நடித்த அஞ்சலிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு சிறந்த நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார் அவர். ஒவ்வொரு காட்சியிலும் அவர் நடிப்பில் தெரிந்த வேரியேஷன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

Anjali Game Changer

பிஸியான அஞ்சலி: இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன. அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். அழகு மட்டுமின்றி திறமையான வெகு சில நடிகைகளில் ஒருவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் அவர்.

காணாமல் போன அஞ்சலி: ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பை காண்பித்து ரசிகர்களை கவர்ந்த அவரை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக திரையுலகிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பின் சிங்கம் 2 படத்தில் பாடல் ஒன்று நடனம் ஆடி; அதனையடுத்து ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருந்தாலும் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை.

மீண்டும் கவனம்: இந்த சூழலில் மீண்டும் அவர் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஃபால் என்ற வெப் சீரிஸில் நடித்த அவர் தெலுngகிலும் ஒரு வெப் சீரிஸில் நடித்தார். மேலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தமிழில் தற்போது ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் நடித்திருக்கிறார். அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர், தெலுங்கில் உருவாகும் மற்றொரு படமான கேங்ஸ் ஆஃப் கோதாவரி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

திருமண சர்ச்சை: இதற்கிடையே அஞ்சலியை சுற்றி திருமண சர்ச்சை கடந்த பல வருடங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது அவர் நடிகர் ஜெய்யுடன் லிவிங் டூ கெதரில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. பிறகு அவரை பிரிந்துவிட்டு தெலுங்கு திரையுலகில் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் ஒரு தகவல் பரவியது. இதற்கெல்லாம் அஞ்சலி பெரிதாக ரெஸ்பான்ஸ் பண்ணாமல் இருந்தார். இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமண சர்ச்சை குறித்து பேசியிருக்கிறார்.

அஞ்சலி பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "எனக்கு முன்று, நான்கு முறை சமூக வலைதளங்களில் திருமணம் செய்து விட்டார்கள். நான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக முன்பெல்லாம் வதந்திகள் வரும்போது எனது வீட்டில் ரொம்பவே கவலைப்பட்டார்கள். ஆனால் இப்போது அதற்கு அவர்கள் பழகிவிட்டார்கள். இந்த வதந்திகள் எல்லாம் வந்த பிறகு உண்மையாகவே ஒருவரை நான் திருமணம் செய்துகொண்டு எனது வீட்டார் முன்பு போய் நின்றால்கூட அவர்கள் நம்பமாட்டார்கள். எனது திருமணத்துக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. சினிமாவில் நான் இப்போது பிஸி" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X