அந்த ஹீரோவை நான் காதலிக்கவே இல்லை.. சும்மா கிளப்பிவிட்டுட்டாங்க.. பிரபல ஹீரோயின் திடீர் மறுப்பு!
சென்னை: அந்த ஹீரோவை நான் ஒருபோதும் காதலிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.
Recommended Video
ஜீவாவின், கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலி.
தொடர்ந்து, வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு, ஜெய் நடித்த எங்கேயும் எப்போதும், தம்பி வெட்டோத்தி சுந்தரம் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

சைலன்ஸ்
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வந்த அஞ்சலி, இடையில் குடும்ப பிரச்னை காரணமாக படங்களில் நடிக்கவில்லை. பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய, பேரன்பு, சிந்துபாத் உட்பட சில படங்களில் நடித்தார். அவர் நடித்து சமீபத்தில் நாடோடிகள் 2 படம் வெளியானது. அடுத்து அனுஷ்கா, மாதவனுடன் நடித்துள்ள சைலன்ஸ் (நிசப்தம்) படம் வெளியாக இருக்கிறது.

தோசை சுடும் போட்டி
இவரும் நடிகர் ஜெய்யும் காதலிப்பதாக கோலிவுட்டில் செய்திகள் வெளியானது. அதற்கு ஆதாரமாக, இருவரும் ஜோடியாக சுற்றுவது, சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை பதிவிடுவது, தோசை சுடும் போட்டியில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது ஆகியவற்றைச் சொன்னார்கள். அதுவும் நம்பும்படியாக இருந்தது.

இருவருக்கும் புரிதல்
நடிகர் ஜெய் அளித்த பேட்டி ஒன்றில், அஞ்சலிக்கும் எனக்கும் நல்ல புரிதல் உள்ளது. எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்து இருக்கிறது என்று கூறியிருந்தார். இதனால் இவர்கள் காதலிப்பது உண்மைதான் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்று சினிமாத் துறையினர் கூறி வந்தனர். பின்னர் சில வருடங்கள் கழித்து அவர்கள் காதல் முறிந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
திருமணம் செய்வோம்
இந்நிலையில், நடிகை அஞ்சலி, நடிகர் ஜெய்யை தான் ஒருபோதும் காதலிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். நடிகர் ஜெய்யை காதலித்தது இல்லை என்றும் இருவரும் நட்பாக பழகியதை பலர் தவறாக புரிந்துகொண்டார்கள் என்றும் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று பலர் நினைத்தார்கள் என்றும் ஆனால், அதெல்லாம் பொய் என்றும் அஞ்சலி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











