3 கேக் வெட்டி பிறந்தநாளை கலக்கலாக கொண்டாடிய அஞ்சலி.. வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை: நடிகை அஞ்சலியின் 35வது பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பிறந்தநாளை முன்னிட்டு மூன்று கேக்குகளை வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை அஞ்சலியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

35வது பிறந்தநாள்
நடிகை அஞ்சலியின் 35வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 2006ம் ஆண்டு தெலுங்கில் வெளியான போட்டோ படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் நடிகை அஞ்சலி. இயக்குநர் ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படம் தான் தமிழில் இவருக்கு அறிமுக படம்.

நான்கு மொழிகளில்
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்தியாவின் 4 மொழிகளிலும் நடித்துள்ளார் நடிகை அஞ்சலி. மம்முட்டி, பவன் கல்யாண், சூர்யா, ஜெயம் ரவி, ஜீவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார்.

3 கேக் வெட்டி
தனது 35வது பிறந்தநாளை 3 கேக்குகளை வெட்டி நடிகை அஞ்சலி கொண்டாடியுள்ள புகைப்படங்களை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஷேர் செய்துள்ளார். அஞ்சலியின் உருவப் படம் போட்ட போட்டோ கேக் உள்ளிட்ட கேக்குகளை வெட்டி செம ஹேப்பியாக பர்த்டேவை கொண்டாடி உள்ளார்.

செல்ல நாய்க்குட்டி
அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நண்பர்கள், உறவினர்கள் என எந்தவொரு பெரிய கும்பலும் இல்லை. அவரது செல்ல நாய்க்குட்டிக்கு மட்டும் கேக் ஊட்டும் புகைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் அஞ்சலி ஷேர் செய்துள்ளார்.

உங்களால் சந்தோஷமா இருக்கேன்
அஞ்சலியின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட ரசிகர்களும் பிரபலங்களும் அவரை வாழ்த்தினர். உங்களால் தான் உங்கள் அன்பால் தான் நான் எப்பவும் சந்தோஷமாக இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி என தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார் அஞ்சலி.


Click it and Unblock the Notifications











