தெலுங்கில் அஞ்சலியின் விஸ்வரூபத்தால் ஆடிப்போயுள்ள அமலா பால்
ஹைதராபாத்: அஞ்சலி தெலுங்கு திரையுலகில் முழுமூச்சாக கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது அமலா பாலை எரிச்சலடைய வைத்துள்ளதாம்.
அஞ்சலி மாயமாகி பின்னர் போலீசில் சரண் அடைந்ததால் அவரது மார்க்கெட் புட்டுக் கொள்ளும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு ஆந்திராவில் அஞ்சலியின் மார்க்கெட் பிக்கப்பாகிவிட்டது.
தற்போது அவர் தமிழை விட தெலுங்கு படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம்.

நான் கொஞ்சம் பிசி
கோலிவுட்டில் இருந்து யாராவது அஞ்சலிக்கு போன் செய்து படம் பற்றி பேசினால் நான் தெலுங்கில் பிசியாக இருக்கிறேன். பிறகு பார்ப்போம் என்று கூறி போனை வைத்துவிடுகிறாராம்.

முன்னணி நடிகையாக முயற்சி
தெலுங்கில் முன்னணி நடிகையாகிவிட வேண்டும் என்று முழுமூச்சில் முயற்சி செய்து வருகிறாராம் அஞ்சலி.

அமலா பால் சான்ஸ் போச்சே
அமலா பால் பேசி வைத்திருந்த தெலுங்கு படம் ஒன்று தற்போது அஞ்சலி வசம் சென்றுவிட்டது. இதனால் கடுப்பான அமலா சம்பளம் மற்றும் கிளாமரில் தாராளம் காட்ட முடிவு செய்திருக்கிறாராம்.

5 விரலைக் காட்டும் அஞ்சலி
அஞ்சலி இதுவரை அதிகபட்சமாக சேட்டை படத்திற்கு ரூ.20 லட்சம் சம்பளம் வாங்கினார். தற்போது தெலுங்கில் தனக்கு கிராக்கி அதிகரித்துள்ளதை உணர்ந்த அவர் தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் 5 விரலைக் காட்டுகிறாராம்.


Click it and Unblock the Notifications











