ஆத்தி.. ஒரு மசாஜுக்கு இத்தனை லட்சம் செலவா?.. மலையாள நடிகை அஞ்சு குரியன் வெளியிட்ட பில் வைரல்!
பாலி: மலையாள நடிகை அஞ்சு குரியன் இந்த சம்மர் வெயிலை சமாளிக்க பாலி தீவுகளுக்கு சுற்றுலா செய்ய கிளம்பி உள்ளார். ஜப்பானின் பாரம்பரிய ஸ்பா மசாஜை அங்கே அவர் எக்ஸ்பீரியன்ஸ் செய்துள்ள வீடியோவை வெளியிட தற்போது அதுதான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாத வெயிலை முன்னிட்டு பல சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் குளு குளு பிரதேசங்களுக்கு கிளம்பி சென்றுவிட்டனர். அங்கே அவர்கள் நீச்சல் உடைகளில் எடுத்து வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் துபாய்க்கு கிளம்பிச் சென்றுவிட்டார். ஏகப்பட்ட நடிகைகள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் கவர்ச்சி வீடியோக்களை அள்ளித் தெளித்து வரும் நிலையில், மசாஜ் ஒன்றுக்கு பல லட்சம் செலவு செய்துள்ளதாக நடிகை அஞ்சு குரியன் வெளியிட்ட பில் தற்போது வைரலாகி வருகிறது.
பாலி தீவில் அஞ்சு குரியன்: நிவின் பாலி நடிப்பில் தமிழ், மலையாளத்தில் வெளியான நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அஞ்சு குரியன். சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், அதர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த சம்மரை பாலி தீவில் கொண்டாட கிளம்பிய அஞ்சு குரியன் அங்கே தான் எக்ஸ்பிரீயன்ஸ் செய்த விலை உயர்ந்த ஸ்பா மசாஜ் பற்றிய வீடியோவை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.
7.25 லட்சத்துக்கு மசாஜ்: பொதுவாக ஃபுல் பாடி மசாஜ் பேக்கேஜ்கள் 5000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் அளவில் சென்னையிலேயே பல பெரிய ஸ்பா சென்டர்களில் கிடைக்கின்றன. வெளிநாட்டில் உள்ள தீவுகளில் மசாஜ்கள் சற்றே காஸ்ட்லி தான். ஆனால், நடிகை அஞ்சு குரியன் எடுத்துக் கொண்ட ஜப்பான் ஸ்பா மசாஜ் அதிகபட்சமாக 7.25 லட்சம் ஆனதாக பில் வெளியிட்டு வீடியோ வெளியிட தற்போது அது சோஷியல் மீடியாவில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. 100 ரூபாய்க்கு நல்ல எண்ணெய், 1000 ரூபாய்க்கு ஆலிவ் எண்ணெய் வாங்கித் தேய்த்தாலே போதுமே, அதுக்கு ஏன்ப்பா இம்புட்டு செலவு என கேள்விகள் கிளம்பி உள்ளன.
மேலாடையின்றி: நடிகை அஞ்சு குரியன் மேலாடை அணியாமல் வெறும் டவலை மட்டும் போர்த்திக் கொண்டு அந்த மசாஜை செய்த வீடியோவையும் வெளியிட்ட நிலையில், லைக்குகளும் கமெண்ட்டுகளும் எக்கச்சக்கமாக குவிந்து வருகின்றன. மேலும், அவர் ஷேர் செய்த பில் வைரலாகி வருவது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக பாலி தீவுக்கு சென்று வர நடிகை அஞ்சு குரியன் அதிகபட்சமாக எத்தனை லட்சம் செலவு செய்திருப்பார் என்றும் ரசிகர்கள் கணக்குப் போட்டு அம்மணி பெரிய இடம் தான் என ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications