மோதலில் ஹீரோயின்கள்

By Staff

தமிழில் புதிய வாய்ப்புகளைப் பிடிப்பதில் மூன்று நடிகைகளுக்கு இடையே கிட்டத்தட்ட அடிதடியே நடந்து வருகிறது.

சிம்ரன் சுனாமி அலை ஓய்ந்த நிலையில் அந்த இடத்தை இதுவரை யாரும் பிடிக்கவில்லை. ஸ்னேகா, த்ரிஷா, ரீமா, கோபிகா ஆகியோர்ஒரு பக்கம் நல்ல ரோல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் ரீமா மட்டுமே அதிக கிளாமருக்கும் தலையாட்டுகிறார்.

இந்த நால்வரின் கால்ஷீட்டுகளும் புல்லோ புல். இதனால் இவர்களுக்கு வரும் வாய்ப்புக்கள் அடுத்த நிலையில் உள்ள சதா, ஆசின்,தேஜாஸ்ரீ, சாயாசிங் ஆகியோரைத் தேடிப் போய் வருகின்றன.

இப்போது இவர்களுக்குப் போட்டியாக அதிரடியாக களத்தில் குதித்து வாய்ப்பு வேட்டையில் கடும் சண்டைக்கு பிள்ளையார் சுட்டிபோட்டுவிட்டுள்ளனர் அங்கிதா, நமீதா மற்றும் புளோரா ஆகியோர். தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து வாய்ப்பு வேட்டையாடிவருகின்றனர்.

இதில் நமீதாவும் புளோராவும் தயாரிப்பாளர் என்ன சொன்னாலும் தலையாட்டுகின்றனர். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடிக்கத் தயார்என்கின்றனர்.

ஆசின், சதாவைப் பொறுத்தவரை சான்சுக்காக அலைவதில்லை. அவர்களைத் தேடி தெலுங்கிலும் தமிழிலும் நல்ல வாய்ப்புக்கள்வந்தவண்ணமே உள்ளன.

ஆனால், தேஜாஸ்ரீயும் சாயா சிங்கும் எந்த ரோல் வேண்டுமானாலும் ஒப்புக் கொள்கின்றனர். காமெடியனுக்கு ஜோடியா, ஒத்தை பாட்டுக்குடான்ஸா எதற்கும் இவர்கள் ஓ.கே. இதனால் இவர்கள் வசமும் கை நிறையப் படங்கள்.

இப்போது இவர்களுக்கு வேட்டு வைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் புளோரா. இவர் தமிழ்த் திரையுலகில் உள்ள முக்கிய மலையாளிடெக்னீசியன்களைப் பிடித்து எப்படியாவது படத்துக்குள் நுழைந்துவிட முயன்று வென்று வருகிறார்.

நமீதாவின் டெக்னிக் அலாதியானது. மூத்த நடிகரோ, இளைய நடிகரோ பாகுபாடு பார்க்காமல் நெருக்கமாய் நடித்துகுளிர்வித்துவிடுகிறார். இதனால் எல்லா தரப்பிலும் இவருக்கு ஒரு கிரேஸ். அதை அழகாகப் பயன்படுத்தி வாய்ப்புக்களைத் தட்டி வருகிறார்.

இந்த இருவருமே கோடம்பாக்கத்தில் துக்கடா தயாரிப்பாளரைக் கூட விடாமல் சந்தித்து வாய்ப்பு தேத்தி வருகின்றனர்.

இந்த இருவர் இப்படியென்றால் தனது வசீகரத்தால் இயக்குனர்களைக் கவர்வது அங்கிதா. தெலுங்கில் ஹீரோக்களால் வந்த செக்ஸ்டார்ச்சர்கள் காரணமாக தமிழையே சுற்றி வர ஆரம்பித்துள்ள அங்கிதா, இங்கு வாய்ப்புப் பிடிப்பதற்காக தெலுங்கில் கூட காட்டாதஅளவுக்கு கவர்ச்சி மழையில் நனைகிறார். துள்ளத் துடிக்க நடிக்கிறார்.

இதனால் ஆசின், சதா, சாயா, தேஜாஸ்ரீ பக்கம் போக வேண்டிய வாய்ப்புக்கள் இந்த மூவர் பக்கமாகத் திரும்பி வருகின்றன.

இதில் அங்கிதாவைத் தான் கவனத்துடன் பார்க்கின்றனர் கோடம்பாக்கம் குருவிகள். ரீமா, ஸ்னேகா, கோபிகா, த்ரிஷா ஆகியோருக்குஇணையாக கவர்ச்சியோடு நடிப்பிலும் தூள் பரத்தும் நடிகை இவர் என்பதால் அங்கிதா தமிழில் நிலைப்பார் என்கின்றனர்.

நமீதா கொஞ்சம் ஆட்டம் காட்டுவார், ஆனால், புளோரா நின்று விளையாடும் ரகம் இல்லை. கிடைத்தவரை காசு தேத்திவிட்டுபொட்டியைக் கட்டுபவராகவே தெரிகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X