twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் படிக்கும் அங்கிதா தகதிமிதா அங்கிதா தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வர முடிவு செய்து விட்டார். இதற்காக அவர் ஒரு டீச்சரைசம்பளத்திற்கு வைத்து தமிழ் கற்று வருகிறாராம்.பல வருடங்களுக்கு முன் டிவியில் வந்த ஒரு விளம்பரம் இன்னும் பலருக்கு ஞாபகத்தில் இருக்கும். ஐ லவ் யூரஸ்னா என்று ஒரு குட்டிப் பெண் கூறுவாள். அந்த கொழுக் மொழுக் குட்டிப் பெண் தான் தகதிமிதா அங்கிதா.மும்பை இறக்குமதியான அங்கிதா தகதிமிதா தவிர பிரஷாந்தின் லண்டனிலும் நாயகியாக நடித்துள்ளார். இதற்குஅப்புறம் இதுவரை குறிப்பிடும் படியாக ஒரு படமும் இவருக்கு புக்காகவில்லை.தெலுங்கில் 7 படங்களில் நடித்து முடித்து விட்ட அங்கிதாவுக்கு தமிழ் மீது தான் கிரேஸ் அதிகம். முதல் 2 படங்கள்சுமார் ரகம் தான் என்றாலும் தமிழில் நன்றாக காலூன்றி ஒரு ரவுண்டு வந்தே தீருவது என்ற முடிவில் அங்கிதாஉள்ளார். (தமிழ் ரசிகர்கள் மீது அவ்வளவு நம்பிக்கையா?)இதற்காக மும்பையில் ஒரு தமிழ் டீச்சரை தேடிப்பிடித்து தனது வீட்டில் வைத்தே தமிழ் கற்று வருகிறார். இன்னும்ஒரு சில மாதங்களில் சரளமாக தமிழ் பேசத் தொடங்கி விடுவேன் என்று மிகவும் நம்பிக்கையுடன் கூறியஅங்கிதாவிடம் எதிர்காலத் திட்டம் குறித்து கேட்டோம்.எதிர்காலத்தைப் பற்றி பெரிய அளவில் திட்டமெல்லாம் கிடையாதுங்க. நல்ல நடிப்பை வெளிப்படுத்தும்படங்களில் நடிக்க வேண்டும். கதைக்கு தேவையிருந்தால் மட்டும் கிளாமராக நடிப்பேன் (அப்பாடா... தமிழுக்குமேலும் ஒரு கவர்ச்சி நடிகை கிடைத்து விட்டார்).தொடர்ந்து எனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் நல்ல ரோல்களில் நடிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்டகாலத்திற்குப் பிறகு வாழ்க்கையில் செட்டிலாகி விடவேண்டும்.ஆனாலும் சினிமாவை விட்டு நான் எங்கும் போக மாட்டேன். நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் என்கைவசம் வேறு ஐடியா இருக்கிறது.எனக்கு நடிக்க மட்டும் தான் தெரியும் என்று நினைத்து விடாதீர்கள். நன்றாக கதையும் எழுதுவேனாக்கும்.நிறைய கதைகள் என்னிடம் ரெடியாக இருக்கிறது. (நல்ல கதை தேவைப்படுபவர்கள் உடனே அணுகவும்)ஆனால் இதுவரை யாரிடமும் என்னுடைய கதைகளை கூறியதில்லை என்று கூறி சிரித்த அங்கிதாவிடம், இப்போதமிழில் மட்டுமல்லாமல் எல்லா திரையுலகிலும் பயங்கர போட்டி இருக்கிறதே எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்என்று கேட்ட நம்மிடம், போட்டி இருந்தால் தான் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும்.இல்லாவிட்டால் போரடித்து விடும். போட்டிகளில் ஜெயித்து நான் முதலிடத்தை பிடிப்பேன் என்று உறுதியாககூறுகிறார் அங்கிதா. பெஸ்ட் ஆப் லக் அங்கி!

    By Staff
    |

    தகதிமிதா அங்கிதா தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வர முடிவு செய்து விட்டார். இதற்காக அவர் ஒரு டீச்சரைசம்பளத்திற்கு வைத்து தமிழ் கற்று வருகிறாராம்.

    பல வருடங்களுக்கு முன் டிவியில் வந்த ஒரு விளம்பரம் இன்னும் பலருக்கு ஞாபகத்தில் இருக்கும். ஐ லவ் யூரஸ்னா என்று ஒரு குட்டிப் பெண் கூறுவாள். அந்த கொழுக் மொழுக் குட்டிப் பெண் தான் தகதிமிதா அங்கிதா.

    மும்பை இறக்குமதியான அங்கிதா தகதிமிதா தவிர பிரஷாந்தின் லண்டனிலும் நாயகியாக நடித்துள்ளார். இதற்குஅப்புறம் இதுவரை குறிப்பிடும் படியாக ஒரு படமும் இவருக்கு புக்காகவில்லை.

    தெலுங்கில் 7 படங்களில் நடித்து முடித்து விட்ட அங்கிதாவுக்கு தமிழ் மீது தான் கிரேஸ் அதிகம். முதல் 2 படங்கள்சுமார் ரகம் தான் என்றாலும் தமிழில் நன்றாக காலூன்றி ஒரு ரவுண்டு வந்தே தீருவது என்ற முடிவில் அங்கிதாஉள்ளார். (தமிழ் ரசிகர்கள் மீது அவ்வளவு நம்பிக்கையா?)

    இதற்காக மும்பையில் ஒரு தமிழ் டீச்சரை தேடிப்பிடித்து தனது வீட்டில் வைத்தே தமிழ் கற்று வருகிறார். இன்னும்ஒரு சில மாதங்களில் சரளமாக தமிழ் பேசத் தொடங்கி விடுவேன் என்று மிகவும் நம்பிக்கையுடன் கூறியஅங்கிதாவிடம் எதிர்காலத் திட்டம் குறித்து கேட்டோம்.

    எதிர்காலத்தைப் பற்றி பெரிய அளவில் திட்டமெல்லாம் கிடையாதுங்க. நல்ல நடிப்பை வெளிப்படுத்தும்படங்களில் நடிக்க வேண்டும். கதைக்கு தேவையிருந்தால் மட்டும் கிளாமராக நடிப்பேன் (அப்பாடா... தமிழுக்குமேலும் ஒரு கவர்ச்சி நடிகை கிடைத்து விட்டார்).

    தொடர்ந்து எனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் நல்ல ரோல்களில் நடிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்டகாலத்திற்குப் பிறகு வாழ்க்கையில் செட்டிலாகி விடவேண்டும்.

    ஆனாலும் சினிமாவை விட்டு நான் எங்கும் போக மாட்டேன். நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் என்கைவசம் வேறு ஐடியா இருக்கிறது.

    எனக்கு நடிக்க மட்டும் தான் தெரியும் என்று நினைத்து விடாதீர்கள். நன்றாக கதையும் எழுதுவேனாக்கும்.நிறைய கதைகள் என்னிடம் ரெடியாக இருக்கிறது. (நல்ல கதை தேவைப்படுபவர்கள் உடனே அணுகவும்)

    ஆனால் இதுவரை யாரிடமும் என்னுடைய கதைகளை கூறியதில்லை என்று கூறி சிரித்த அங்கிதாவிடம், இப்போதமிழில் மட்டுமல்லாமல் எல்லா திரையுலகிலும் பயங்கர போட்டி இருக்கிறதே எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்என்று கேட்ட நம்மிடம், போட்டி இருந்தால் தான் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும்.

    இல்லாவிட்டால் போரடித்து விடும். போட்டிகளில் ஜெயித்து நான் முதலிடத்தை பிடிப்பேன் என்று உறுதியாககூறுகிறார் அங்கிதா.

    பெஸ்ட் ஆப் லக் அங்கி!

      Read more about: angitha learning tamil
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X