»   »  அங்கிதா, ஐ லவ் யூ ரஸ்னா... ஐ லவ் யூ ரஸ்னா! என்று ஒரு சுட்டியான குட்டிப் பெண் விளம்பரங்களில் வந்து சிரிக்குமே ஞாபகமிருக்கா? அந்தச் சுட்டிப்பொண்ணு இப்போது வளர்ந்து, ஆளாகி அசத்தல் ஹீரோயின் ஆகி விட்டார். அவர் வேறு யாருமல்ல, அங்கிதாதான்...அங்கிதாவிடம் ரஸ்னா குறித்துக் கேட்டால் பிரகாசமாகி விடுகிறார். அது ஒரு பெரிய கதை. நான் சின்ன வயசில் ரொம்பதுறுதுறுப்பாக இருப்பேன். அதனால் எனக்கு விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனது பெற்றோர் உடனே நடிக்கவைத்து விட்டனர்.அப்படி நடித்ததில் ஒன்றுதான் ரஸ்னா விளம்பரம். ரொம்பப் பாப்புலர் ஆனதால், நான் எங்கே போனாலும் ரஸ்னான்னுதான்கூப்பிடுவாங்க. அப்படியே நிறைய விளம்பரப் படங்களில் நடித்து விட்டேன்.அப்புறம் வயசுக்கு வந்து குமரியானதும் மாடலிங்கில் குதித்தேன். அதிலும் நான் பிரபலம் ஆனதால் நிறைய மாடலிங்வாய்ப்புகள் வந்தன. அப்போது தான் மும்பையில் ஒரு ரேம்ப் ஷோவில் என்னைப் பார்த்த சிலர் தெலுங்கு புரடியூசர்களிடம்சொல்ல, அப்படியே தெலுங்குப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதற்காக மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்குக் குடி பெயர்ந்தேன்.நான் நடித்த ஒரு தெலுங்குப் படத்தைப் பார்த்து விட்டுத்தான் இயக்குனர் சுந்தர்.சி. என்னை தனது லண்டன் படத்தில் நடிக்ககூப்பிட்டார். அதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அப்படியே சுந்தர்.சி.யின் தகதிமிதா படத்திலும் நடித்து விட்டேன்.இரு படங்களும் சுமாராக ஓடினாலும் கூட எனக்கு தொடர்ந்து தமிழ்ப் பட வாய்ப்புகள் வரவில்லை.இதனால் ஹைதராபாத் திரும்பிவிட்ட நான் அங்கு தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இப்போது கைநிறைய தெலுங்குப் படங்கள் இருக்கின்றன என கைகளை விரித்துக் காட்டினார். சரி, அப்போ தமிழுக்கு வர மாட்டீங்களா? என்று நாம் கவலையோடு கேட்க,அப்படியெல்லாம் இல்லையே. நல்ல வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன். சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை, எனதுகேரக்டர் சரியில்லை. இதனால் மறுத்து விட்டேன். நல்ல கேரக்டராக இருந்தால்தான் நடிப்பேன்.சும்மா நடிக்க எனக்குப் பிடிக்காது. நமது கேரக்டர் ரசிகர்களால் பேசப்பட வேண்டும். அதுதான் நமக்கும் நல்ல பெயரை வாங்கித்தரும். எனக்குப் பிடித்த நடிகை ஸ்ரீதேவிதான். அவர்தான் கிளாமர், ஹோம்லி, அப்பாவி, சீரியஸ் என பலவகையான ரோல்களில்நடித்துள்ளார். அவர் மாதிரி நடிக்க வேண்டும் என்றார்.அங்கீதாவைச் சுற்றிலும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள்.. ஹீரோக்களை தனியே சந்தித்து மடக்குகிறார், இந்தச் சந்திப்புகள்எசகுபிசகாகிவிட மும்பையில் வயிற்றில் ஒரு ஆபரேசன் செய்து கொண்டார் என்பது உள்பட.. பல கிசுகிசுக்கள். அதைப் பற்றிக்கேட்டால், அங்கீதாவுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லையாம். ஒரு நடிகைன்னா கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும். அதற்காக கவலைப்பட்டால் நமது வேலை நடக்குமா? அதனால் என்னைப்பற்றிய கிசுகிசுக்கள் குறித்து நான் கவலையே படமாட்டேன். ஜாலியாகப் படித்து விட்டுப் போய் விடுவேன் என்கிறார்.உங்களுக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்குறதா சொல்றாங்களே என்று கேட்டால்... அட நம்மள பத்தி இன்னொரு கிசுகிசுவா..எழுதுங்க.. சும்மா எழுதிக்குங்க என்கிறார் எக்குதப்பாய்.அய்யய்யோ, இந்த ஆட்டக்கி நாங்க வரலப்பா...

அங்கிதா, ஐ லவ் யூ ரஸ்னா... ஐ லவ் யூ ரஸ்னா! என்று ஒரு சுட்டியான குட்டிப் பெண் விளம்பரங்களில் வந்து சிரிக்குமே ஞாபகமிருக்கா? அந்தச் சுட்டிப்பொண்ணு இப்போது வளர்ந்து, ஆளாகி அசத்தல் ஹீரோயின் ஆகி விட்டார். அவர் வேறு யாருமல்ல, அங்கிதாதான்...அங்கிதாவிடம் ரஸ்னா குறித்துக் கேட்டால் பிரகாசமாகி விடுகிறார். அது ஒரு பெரிய கதை. நான் சின்ன வயசில் ரொம்பதுறுதுறுப்பாக இருப்பேன். அதனால் எனக்கு விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனது பெற்றோர் உடனே நடிக்கவைத்து விட்டனர்.அப்படி நடித்ததில் ஒன்றுதான் ரஸ்னா விளம்பரம். ரொம்பப் பாப்புலர் ஆனதால், நான் எங்கே போனாலும் ரஸ்னான்னுதான்கூப்பிடுவாங்க. அப்படியே நிறைய விளம்பரப் படங்களில் நடித்து விட்டேன்.அப்புறம் வயசுக்கு வந்து குமரியானதும் மாடலிங்கில் குதித்தேன். அதிலும் நான் பிரபலம் ஆனதால் நிறைய மாடலிங்வாய்ப்புகள் வந்தன. அப்போது தான் மும்பையில் ஒரு ரேம்ப் ஷோவில் என்னைப் பார்த்த சிலர் தெலுங்கு புரடியூசர்களிடம்சொல்ல, அப்படியே தெலுங்குப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதற்காக மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்குக் குடி பெயர்ந்தேன்.நான் நடித்த ஒரு தெலுங்குப் படத்தைப் பார்த்து விட்டுத்தான் இயக்குனர் சுந்தர்.சி. என்னை தனது லண்டன் படத்தில் நடிக்ககூப்பிட்டார். அதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அப்படியே சுந்தர்.சி.யின் தகதிமிதா படத்திலும் நடித்து விட்டேன்.இரு படங்களும் சுமாராக ஓடினாலும் கூட எனக்கு தொடர்ந்து தமிழ்ப் பட வாய்ப்புகள் வரவில்லை.இதனால் ஹைதராபாத் திரும்பிவிட்ட நான் அங்கு தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இப்போது கைநிறைய தெலுங்குப் படங்கள் இருக்கின்றன என கைகளை விரித்துக் காட்டினார். சரி, அப்போ தமிழுக்கு வர மாட்டீங்களா? என்று நாம் கவலையோடு கேட்க,அப்படியெல்லாம் இல்லையே. நல்ல வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன். சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை, எனதுகேரக்டர் சரியில்லை. இதனால் மறுத்து விட்டேன். நல்ல கேரக்டராக இருந்தால்தான் நடிப்பேன்.சும்மா நடிக்க எனக்குப் பிடிக்காது. நமது கேரக்டர் ரசிகர்களால் பேசப்பட வேண்டும். அதுதான் நமக்கும் நல்ல பெயரை வாங்கித்தரும். எனக்குப் பிடித்த நடிகை ஸ்ரீதேவிதான். அவர்தான் கிளாமர், ஹோம்லி, அப்பாவி, சீரியஸ் என பலவகையான ரோல்களில்நடித்துள்ளார். அவர் மாதிரி நடிக்க வேண்டும் என்றார்.அங்கீதாவைச் சுற்றிலும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள்.. ஹீரோக்களை தனியே சந்தித்து மடக்குகிறார், இந்தச் சந்திப்புகள்எசகுபிசகாகிவிட மும்பையில் வயிற்றில் ஒரு ஆபரேசன் செய்து கொண்டார் என்பது உள்பட.. பல கிசுகிசுக்கள். அதைப் பற்றிக்கேட்டால், அங்கீதாவுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லையாம். ஒரு நடிகைன்னா கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும். அதற்காக கவலைப்பட்டால் நமது வேலை நடக்குமா? அதனால் என்னைப்பற்றிய கிசுகிசுக்கள் குறித்து நான் கவலையே படமாட்டேன். ஜாலியாகப் படித்து விட்டுப் போய் விடுவேன் என்கிறார்.உங்களுக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்குறதா சொல்றாங்களே என்று கேட்டால்... அட நம்மள பத்தி இன்னொரு கிசுகிசுவா..எழுதுங்க.. சும்மா எழுதிக்குங்க என்கிறார் எக்குதப்பாய்.அய்யய்யோ, இந்த ஆட்டக்கி நாங்க வரலப்பா...

Subscribe to Oneindia Tamil
ஐ லவ் யூ ரஸ்னா! என்று ஒரு சுட்டியான குட்டிப் பெண் விளம்பரங்களில் வந்து சிரிக்குமே ஞாபகமிருக்கா? அந்தச் சுட்டிப்பொண்ணு இப்போது வளர்ந்து, ஆளாகி அசத்தல் ஹீரோயின் ஆகி விட்டார். அவர் வேறு யாருமல்ல, அங்கிதாதான்...

அங்கிதாவிடம் ரஸ்னா குறித்துக் கேட்டால் பிரகாசமாகி விடுகிறார். அது ஒரு பெரிய கதை. நான் சின்ன வயசில் ரொம்பதுறுதுறுப்பாக இருப்பேன். அதனால் எனக்கு விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனது பெற்றோர் உடனே நடிக்கவைத்து விட்டனர்.

அப்படி நடித்ததில் ஒன்றுதான் ரஸ்னா விளம்பரம். ரொம்பப் பாப்புலர் ஆனதால், நான் எங்கே போனாலும் ரஸ்னான்னுதான்கூப்பிடுவாங்க. அப்படியே நிறைய விளம்பரப் படங்களில் நடித்து விட்டேன்.

அப்புறம் வயசுக்கு வந்து குமரியானதும் மாடலிங்கில் குதித்தேன். அதிலும் நான் பிரபலம் ஆனதால் நிறைய மாடலிங்வாய்ப்புகள் வந்தன. அப்போது தான் மும்பையில் ஒரு ரேம்ப் ஷோவில் என்னைப் பார்த்த சிலர் தெலுங்கு புரடியூசர்களிடம்சொல்ல, அப்படியே தெலுங்குப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இதற்காக மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்குக் குடி பெயர்ந்தேன்.

நான் நடித்த ஒரு தெலுங்குப் படத்தைப் பார்த்து விட்டுத்தான் இயக்குனர் சுந்தர்.சி. என்னை தனது லண்டன் படத்தில் நடிக்ககூப்பிட்டார். அதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அப்படியே சுந்தர்.சி.யின் தகதிமிதா படத்திலும் நடித்து விட்டேன்.

இரு படங்களும் சுமாராக ஓடினாலும் கூட எனக்கு தொடர்ந்து தமிழ்ப் பட வாய்ப்புகள் வரவில்லை.

இதனால் ஹைதராபாத் திரும்பிவிட்ட நான் அங்கு தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இப்போது கைநிறைய தெலுங்குப் படங்கள் இருக்கின்றன என கைகளை விரித்துக் காட்டினார்.

சரி, அப்போ தமிழுக்கு வர மாட்டீங்களா? என்று நாம் கவலையோடு கேட்க,

அப்படியெல்லாம் இல்லையே. நல்ல வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன். சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை, எனதுகேரக்டர் சரியில்லை. இதனால் மறுத்து விட்டேன். நல்ல கேரக்டராக இருந்தால்தான் நடிப்பேன்.

சும்மா நடிக்க எனக்குப் பிடிக்காது. நமது கேரக்டர் ரசிகர்களால் பேசப்பட வேண்டும். அதுதான் நமக்கும் நல்ல பெயரை வாங்கித்தரும். எனக்குப் பிடித்த நடிகை ஸ்ரீதேவிதான். அவர்தான் கிளாமர், ஹோம்லி, அப்பாவி, சீரியஸ் என பலவகையான ரோல்களில்நடித்துள்ளார். அவர் மாதிரி நடிக்க வேண்டும் என்றார்.

அங்கீதாவைச் சுற்றிலும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள்.. ஹீரோக்களை தனியே சந்தித்து மடக்குகிறார், இந்தச் சந்திப்புகள்எசகுபிசகாகிவிட மும்பையில் வயிற்றில் ஒரு ஆபரேசன் செய்து கொண்டார் என்பது உள்பட.. பல கிசுகிசுக்கள். அதைப் பற்றிக்கேட்டால், அங்கீதாவுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லையாம்.

ஒரு நடிகைன்னா கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும். அதற்காக கவலைப்பட்டால் நமது வேலை நடக்குமா? அதனால் என்னைப்பற்றிய கிசுகிசுக்கள் குறித்து நான் கவலையே படமாட்டேன். ஜாலியாகப் படித்து விட்டுப் போய் விடுவேன் என்கிறார்.

உங்களுக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்குறதா சொல்றாங்களே என்று கேட்டால்... அட நம்மள பத்தி இன்னொரு கிசுகிசுவா..எழுதுங்க.. சும்மா எழுதிக்குங்க என்கிறார் எக்குதப்பாய்.

அய்யய்யோ, இந்த ஆட்டக்கி நாங்க வரலப்பா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil