நயன்தாரா – விக்னேஷ் சிவனுடன் ஷாப்பிங் செய்த நடிகை... யாருன்னு தெரியுமா ?

துபாய் : புத்தாண்டை கொண்டாடுவதற்காக கோலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் துபாய் சென்றுள்ளார். துபாயில் புகழ்பெற்ற புஜாரா கட்டிடத்தின் முன் இவர்கள் ரொமான்டிக்காக புத்தாண்டை கொண்டாடிய ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வந்தன.

இந்த ஃபோட்டோக்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இந்த பதிவுகள் செம வைரலாகின. ரசிகர்களும் இதை பாராட்டு, புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர்.

நயனை சந்தித்த நடிகை

நயனை சந்தித்த நடிகை

இந்நிலையில் துபாயில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஷாப்பிங் சென்றுள்ளனர். அப்போது அங்கு பிரபல நடிகை மெஹ்ரின் பிர்சாடாவும் ஷாப்பிங் வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு வழியாக சந்தித்து விட்டேன்

ஒரு வழியாக சந்தித்து விட்டேன்

இந்த ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மெஹ்ரின், ஒருவழியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையும், விக்னேஷ் சிவனையும் சந்தித்து விட்டேன். அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

பிஸியான ப்யூட்டிஸ்

பிஸியான ப்யூட்டிஸ்

நயன்தாராவும், மெஹ்ரினும் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள். மெஹ்ரின் தற்போது அனில் ரவிபுடி இயக்கும் F3 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

மலையாளத்திலும் நயன் பிஸி

மலையாளத்திலும் நயன் பிஸி

நயன்தாரா தற்போது அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கும் பாட்டு படத்தில் நடித்து வருகிறார். இதில் ஃபகத் ஃபாசிலுடன் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து மோகன் ராஜாவின் காட்ஃபாதர் படத்திலும் நடிக்க உள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடிக்கவும் நயன்தாராவிடம் பேசப்பட்டு வருகிறது.

Recommended Video

Dubai -ல் New Year கொண்டாடும் Nayanthara | Celebrities Wishes New Year 2022
தமிழிலும் குவியும் வாய்ப்புக்கள்

தமிழிலும் குவியும் வாய்ப்புக்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழிலும் சில படங்களில் நடிக்க நயன்தாராவிற்கு வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X