கவர்ச்சி போஸ்... நடிகை ஹன்சிபாவுக்கு கொலை மிரட்டல்

By Shankar

தனது கவர்ச்சிப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை ஹன்சிபாவுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததால் நடிகை அதிர்ச்சியில் உள்ளார்.

அன்சிபா ஹாசன் கேரளாவைச் சேர்ந்தவர். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.

தமிழில் பரஞ்சோதி என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை 2-ல் நடித்தார். அதன் பிறகு ஓரிரு தமிழ்ப் படங்கள்தான் கிடைத்தன.

Ansiba gets life threat

எனவே மலையாளத்தில் நடிக்கப் போனார். அங்கு த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால், மீனா தம்பதியின் மூத்த மகள் கேரக்டரில் நடித்தார். இந்தப் படம் அவருக்கு பல புதிய வாய்ப்புகளை மலையாளத்தில் பெற்றுத் தந்துள்ளது.

ஏற்கெனவே அவர் கவர்ச்சியாக நடிக்கத் தயங்காதவர் என்பதால், புதிய படங்களில் ஏக கவர்ச்சி காட்டி வருகிறாராம்.

தனது கவர்ச்சிப் படங்களை சமீபத்தில் இணையதளங்களில் பரவ விட்டார். பேஸ்புக்கிலும் அவற்றைப் பதிவேற்றியுள்ளார். இதைப் பார்த்து பலர் பாராட்டினாலும், ஒரு முஸ்லிம் பெண் இந்த மாதிரி கவர்ச்சி காட்டுவதா என்று கடும் மிரட்டல் விடுத்துள்ளனர். சிலர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதால் அன்சிபா அதிர்ச்சிக்குள்ளானார்.

இப்படி கவர்ச்சி காட்டுவது மதக் கொள்கைக்கு விரோதமானது. இந்த செயலுக்காக கடவுள் முன் தண்டனை கிடைக்கும் என்று மிரட்டி உள்ளனர். அன்சிபாவை மோசமான வார்த்தைகளால் திட்டியும் எச்சரித்தும் உள்ளனர். இதனால் அன்சிபா அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த விஷயத்தை காவல் துறைக்கு கொண்டு செல்லவும் யோசித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X