ஹீரோயின்
குறும்பு படத்தில் அறிகமாகி கட்டுக்கடங்காத கவர்ச்சியால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த தியாவுக்கு இப்போதுமார்க்கெட் சுத்தமாக டமால் ஆகி விட்டதாம்.
தனுஷுடன் நடித்து பாதியில் நின்று போன ட்ரீம்ஸ் மட்டும்தான் அவரது கையில் உள்ள ஒரே படமாம்.
ட்ரீம்ஸும்இப்போதைக்கு வராது என்ற நிலையில் உள்ளதால் தியா வெறுத்துப் போய் உற்சாக பானத்தில் திளைத்து சோகத்தைஆற்றி வருகிறாராம்.
படம் வராவிட்டால் பரவாயில்லை, விளம்பரங்களில் நடிக்கத் தயார் என்று அவர் அறிவித்தும், அவரது கவர்ச்சிமுத்திரை காரணமாக விளம்பரங்களில் நடிக்கக் கூப்பிட ஆளே இல்லையாம்.
அன்ஷூவுக்கும் அதே நிலை
ஜெய் படத்தில் பிரசாந்துடன் நடித்த அன்ஷூ அம்பானிக்கும் தியாவின் நிலைமைதான். படம் தயாரிப்பில்இருந்தபோது, இந்தப் படம் ரிலீஸ் ஆகட்டும். நான் எங்கேயோ போகப் போகிறேன். இப்போதே என்னை புக்செய்ய தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
ஆனால் ஜெய் ரிலீஸூக்குப் பிறகுதான் மற்ற படங்களை ஒப்புக் கொள்வதாக இருக்கிறேன் என்றுபார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தோ, அந்தோ என்று ஒரு வருடமாக எடுக்கப்பட்டஜெய் இறுதியில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன வேகத்தில் படம் படுத்துக் கொண்டது.
தோல்விப் படத்தின் கதாநாயகி என்பதால், அன்ஷூ சீண்டுவாரில்லாமல் போய் விட்டார். கைவசமிருந்த ஒருதெலுங்குப் படமும் கைநழுவிப் போய்விட்டது. வேறு வழியின்றி, மூட்டை முடிச்சுக்களுடன் லண்டனுக்குதிரும்பவும் போய்விட்டார்.


Click it and Unblock the Notifications











