பெத்தவங்க, டாக்டர் சொல்லித் தான் கேட்க மாட்டேங்கிறீங்க: சன்னி லியோன் சொல்வதையாவது கேளுங்க
சென்னை: நடிகை சன்னி லியோன் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக நடித்த வீடியோ தற்போது மீண்டும் வைரல் ஆகியுள்ளது.
தம்மடிக்காதீர்கள், உங்கள் ஆயுள் குறையும், புற்றுநோய் வரும் என்று டாக்டர்கள் வாய் வலிக்க வலிக்க மீண்டும் மீண்டும் கூறினாலும் யாரும் கேட்பது இல்லை.

தம்மடிப்பவர்கள் தம்மடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் தான் நடிகை சன்னி லியோன் புகைப்பிடிக்கும் பழக்கித்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.
அந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. சிகரெட் பழக்கத்தால் வாலிபர் ஒருவர் மரணப் படுக்கையில் இருக்கிறார். அவருக்கு சன்னி லியோன் மீது ஆசை.
உடனே அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற சன்னியை அழைத்து வருகிறார்கள். சன்னி வந்து அந்த வாலிபரை தனது விரல் நுனியால் தொட்ட உடனே அவர் இறந்துவிடுகிறார். புகைப்பழக்கத்தால் உயிர் தான் போகும் என்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications