என்னது பவுன்சர்களுக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா?.. நயன்தாரா பற்றி பிரபலம் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 20 வருடங்களுக்கும் மேல் இருப்பவர் நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது. இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஐயா படத்தில் தனது தமிழ் திரையுலக பயணத்தை ஆரம்பித்த நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் அவருக்கு இரண்டு காதல் தோல்விகள் ஏற்பட்டன. அந்தத் தோல்விகள் அவரை கொஞ்ச காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்க செய்தது. அதனையடுத்து மீண்டும் திரையுலகுக்கு வந்த அவர் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளையும், ரோல்களையும் தேர்ந்தெடுத்து நடித்தார்.
விக்னேஷ் சிவனுடன் காதல்: அப்படி நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் காதல் மலர்ந்தது. அந்தக் காதலோடு சில வருடங்கள் இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்தார்கள். பிறகு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்த அவர் வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றார். மேலும் ஹிந்தியிலும் ஜவான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியிருக்கிறார். மேலும் சில ஹிந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பிரச்னைகள்: திருமணத்துக்கு பிறகு நடித்துவரும் அவரை சுற்றி சில பிரச்னைகளும் எழுந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையானது அவருக்கும் தனுஷுக்கும் இடையே நடந்த பிரச்னை. நயன்தாரா பற்றிய ஆவண படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் சில க்ளிப்பிங்குகளை பயன்படுத்தும் விஷயம் தொடர்பாக இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டது. தனுஷ் அனுமதி தராவிட்டாலும் சில நொடி காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் கடுப்பான தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூக்குத்தி அம்மன் 2: அவர் இப்போது சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். படத்தின் பூஜையில் மீனாவை அவமானப்படுத்திவிட்டார் என்பதில் தொடங்கி; ஷூட்டிங்கின்போது நயனுக்கும் சுந்தர்.சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டதாகவும் தொடர்ந்து பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதேசமயம் இப்போதைக்கு அந்த பிரச்னைகள் முடிந்துவிட்டதாக திரைத்துறையில் கூறப்படுகிறது.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் நயன்தாரா குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. நயன் குறித்து ஒரு வீடியோவில் பேசிய அவர், "நயன்தாரா நடிக்கும் படங்களுக்கு அவருடன் பவுன்சர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய்வரை செலவு ஆகிறது. அதையும் தயாரிப்பு நிறுவனம்தான் கொடுக்க வேண்டும். இப்படி செலவு செய்தாலும் நயன்தாரா நடிக்கும் படங்கள் எதுவும் பெரிதாக லாபத்தை கொடுப்பதில்லை.
புதிய நடிகைகள்: அதன் காரணமாகத்தான் அவருக்கு பதிலாக புதிய நடிகைகளை தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஈ படத்தில் நடித்தபோது நயன் ஒருவருடன் காதலில் இருந்தார். அதனால் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தாமல் ஃபோனும் கையுமாக இருந்தார். அதை அறிந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி அழைத்து திட்டியவுடன் ஒழுங்காக நடித்தார். ஆனால் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்களிடம் எல்லை மீறி நடந்துகொள்கிறார். அதனால்தான் அவர்கள் இவரை ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











