»   »  ஆண்ட்ரியா போடும் கண்டிசன்!

ஆண்ட்ரியா போடும் கண்டிசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழகு நாயகி ஆண்ட்ரியாவுக்கு தமிழ் சினிமா பிடிக்கவில்லையாம். எல்லாப் படத்திலும் ஹீரோக்களுக்கே முக்கியத்துவம் தருவதால் தொடர்ந்துதமிழில் நடிக்கும் யோசனை இல்லை என்கிறார்.

கெளதம் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்துக்கு ஜோடியாக ஜோதிகா மட்டுமல்லாமல், ஆண்ட்ரியாவும் இன்னொரு ஜோடியாகநடித்துள்ளார். ஜோதிகாவைப் போலவே ஆண்ட்ரியாவும் இப்படத்தில் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

வசீகரமான அவரது முகம், வாளிப்பான அழகுடன் படு க்யூட்டாக இருக்கிறார் ஆண்ட்ரியா. அம்மணிக்கு சொந்த ஊரே சென்னைதானாம்.சினிமாவுக்கு வரும் முன்பே ஆண்ட்ரியா ஒரு நடிகை தான். அதாவது மேடை நாடகங்களில் கலக்கிக் கொண்டிருந்தார்.

ஒங்க கதையை கொஞ்சம் சொல்லுங்கோ என்றோம் ஆண்ட்ரியாவிடம். நான் பேசிக்கலி மாடலிங், நாடகங்களில் நடிப்பது, வாய்ப்பு கிடைத்தால்பாடுவது என ஜாலியாக அதேசமயம் பிசியாக இருந்தேன்.

அப்போதுதான் கெளதம் மேனனின் நட்பு கிடைத்தது. இதன் மூலம் விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இப்படித்தான் நான் முதலில்கேமராவுக்கு முகம் காட்டினேன்.

அப்படியே தனது பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திலும் நடிக்க வைத்து விட்டார் கெளதம்.

இந்தப் படத்தில் நான் படு அழகாக, இயல்பாக இருப்பதாக பலரும் பாராட்டுகிறார்கள். மேக்கப் இல்லாமல் நடித்ததுதான் இதற்கு முக்கிய காரணம்.

உண்மையில், ஜோதிகாவுக்குத்தான் என்னை விட நடிக்க நல்ல வாய்ப்பு. ஆனால் ஜோதிகாவைப் போலவே எனக்கும் பெயர் கிடைத்துள்ளதுஎனது அதிர்ஷ்டம்தான்.

அடுத்து என்ன படம்?

எனக்கு தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் இல்லை. காரணம் தமிழிலிலும் இந்தியிலும் ஹீரோக்களை மையமாக வைத்துத்தான் படம் வருகிறது.பாடல்களுக்கு மட்டுமே பெண்களை பயன்படுத்துகிறார்கள்.

எனவே தொடர்ந்து சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை. அதேசமயம் நாடகங்களில் தொடர்ந்து நடிக்கப் போகிறேன்.

அப்புறம் இசையில் ரொம்ப ஆர்வம் உண்டு. அதில் முழு கவனத்தை செலுத்தப் போகிறேன். நல்ல இயக்குநர், நல்ல கதை, நல்ல நடிகர் என்றால்மட்டுமே இனிமேல் என்னை சினிமாவில் பார்க்கலாம் என்றார் ஆண்ட்ரியா.

அடடே அதுக்குள்ள கதவைச் சாத்திட்டியளே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil