பிகில் நடிகையின் கவர்ச்சி சவால்.. அனு இமானுவேல் வெளியிட்ட கிளுகிளு பிக்ஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கொச்சி : தொடர்ந்து குடும்ப கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வருபவர் அனு இமானுவேல்.
தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான அனு இம்மானுவேல் சில நாட்களுக்கு முன் ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது பிகில் நடிகை விடுத்த சவாலை ஏற்று பதிலுக்கு தன்னுடைய மேலாடை அணியாதவாறு உள்ள பிளாக் அண்ட் வொயிட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளதை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

வெற்றி நாயகியாக வலம்
தனது துள்ளலான நடிப்பின் மூலமும் மெச்சும் அழகின் மூலமும் தென்னிந்திய மொழிகளில் வெற்றி நாயகியாக வலம் வரும் அனு இம்மானுவேல் மலையாள திரையுலகில் பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திருப்புமுனையாக அமைந்தது
எனினும் மலையாள திரையுலகில் அறிமுகமாகி பல ஆண்டுகள் கழித்து தமிழில் துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அனு இமானுவேல் அதில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து செல்வதால் ரசிகர்களால் பெரிதாக கவனிக்கப்படவில்லை, இருந்தும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த இவரை குடும்ப திரைப்படங்களை இயக்குவதில் புகழ் பெற்ற இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படம் தமிழில் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பல ரசிகர்களை பெற்று தந்தது.

கவர்ச்சி புகைப்படத்தை
இவ்வாறு தமிழில் இவர் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கனவு கன்னியாக வலம் வரும் அனுவை ரசிகர்கள் அணு அணுவாக ரசித்து வரும் வேளையில் சமீபத்தில் இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் அனைவரையும் கதிகலங்க வைத்த நிலையில் தற்பொழுது மீண்டும் மற்றுமொரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிளாக் அண்ட் வொயிட் சேலஞ்ச்
தற்போது கதாநாயகிகளுக்கு இடையே பல்வேறு சேலஞ்சுகள் பிரபலமாகிவரும் நிலையில் தற்பொழுது ப்ளாக் அண்ட் வைட் புகைப்படத்தை வெளியிடும் சேலஞ்ச் ஒன்று பிரபலமாகி வருகிறது. பிகில் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் ரேபா ஜான் மஞ்சிமா மோகன் கொடுத்த சவாலை ஏற்று பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை பதிவேற்றியதை தொடர்ந்து தற்பொழுது அனு இமானுவேலுக்கு அந்த சவாலை கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ள
இவ்வாறு ரேபாவின் சவாலை ஏற்ற அனுபதிலுக்கு தன்னுடைய முன்னழகு கவர்ச்சி கொஞ்சம் தெரிகின்றவாறு மேலாடை அணியாதவாறு உள்ள பிளாக் அண்ட் வொயிட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சேலஞ்சை செய்து காட்டியுள்ளதை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ள அதே சமயம் அதை ரசித்து வைரலாக்கியும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











