சைடு மூக்குத்தி.. சைடு பார்வை.. அப்பப்பா அனு இம்மானுவேல் என்னா கிறக்கமா இருக்காங்க!
சென்னை : நம்ம வீட்டு பிள்ளை படத்திற்குப் பிறகு நடிகை அனு இமானுவேல் இப்பொழுது முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.
தமிழ் தெலுங்கு மலையாளம் என ரவுண்டு கட்டி நடித்துவரும் அனு இமானுவேல் இப்பொழுது தெலுங்கில் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் மகா சமுத்திரம் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
ஹோம்லி கேர்ள் என நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஏற்கனவே பல ரக ரகமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மிரளவைத்தவர் இப்பொழுது சைட் மூக்குத்தியில் ஓரக்கண்ணால் பார்த்து சிங்கிள் பசங்களை சின்னாபின்னம் ஆக்கியுள்ளார்.

கண்டுகொள்ளவில்லை
தனித்துவமான படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டான மிஸ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். சில காட்சிகளில் மட்டுமே தோன்றியிருந்த இவரை பலரும் கண்டுகொள்ளவில்லை.

அண்ணன் தங்கை பாசம்
இரண்டாவது படத்திலாவது தரமான அறிமுகத்தை கொடுக்க வேண்டும் என எண்ணிய அனுக்கு வசமாக சிக்கியது நம்ம வீட்டு பிள்ளை. காதல், அண்ணன் தங்கை பாசம்,குடும்ப உறவுகள் என பக்கா கமர்ஷியல் திரைப்படமாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பார்ட்னராக நடித்த பிறகு அனு இமானுவேலின் புகழ் எங்கேயோ சென்றுவிட்டது. படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது அதேபோல அனு இமானுவேலுகும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

நடிக்க பேச்சுவார்த்தை
இனி நடித்தால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு கறாராக இருக்கும் இவர் இப்பொழுது தமிழில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதைப் பற்றி அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும்.

கிறங்க வைக்கும் பார்வையில்
காந்தக் கண்ணழகி பாடலில் க்யூட்டான எக்ஸ்பிரஷன்களால் தமிழ் ரசிகர்களை வளைத்துப் போட்ட அனு இப்பொழுது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அணு அணுவாக ஏங்க விட்டுள்ளார். குடும்பப்பாங்கான கதாநாயகி என நினைத்துக் கொண்டிருந்த பலரும் அனு இமானுவேலின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்து வாயடைத்துப் போய் இருக்க இப்பொழுது சைடு மூக்குத்தியில் ஏக்கத்துடன் கிறங்க வைக்கும் பார்வையில் செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு சிங்கிள் பசங்களை சின்னாபின்னம் ஆக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











