கவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி.. அனு இம்மானுவேலை அணு அணுவாக ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை: சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் ஹீரோயின் அனு இம்மானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
நிவின் பாலியின் ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அதற்கு முன்பே மலையாளத்தில் வெளியான ஸ்வப்ன சஞ்சரி படத்தில் சிறு வேடத்தில் நடித்து இருந்தார்.

தமிழில்
கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அனு இம்மானுவேல். மலையாள நடிகையான இவர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகை அனு இம்மானுவேல் பிரபலமானது கடந்த ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் தான். ஐஏஎஸ் ஆகப் போகிறேன் பார்ட்னர் என இவர் பண்ணும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை.

காந்த கண்ணழகி
மேலும், இமான் இசையில் அனிருத் குரலில் வெளியான காந்த கண்ணழகி பாடல் பட்டித் தொட்டியெங்கும் நடிகை அனு இமானுவேலை கொண்டு சென்றது. க்யூட்டான ஹோம்லி கேர்ளாக நடித்து அசத்திய அனு இம்மானுவேல், சமீப காலமாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் மிரள வைக்கும் கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கி வருகிறார்.

மெழுகு டால்
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவர் நடிக்கவில்லை என்றாலும், இவரது இந்த படுகவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மெழுகு டால் நீ என பாடி வருகின்றனர். காந்த கண்களால் இளைஞர்களை கட்டிப் போடும் காந்த கண்ணழகி என கவிதைகளும் கொட்டி வருகின்றன.

குவியுது லைக்ஸ்
இஷா ரெப்பா உள்ளிட்ட நடிகைகளும் அனு இம்மானுவேலின் அந்த ஹாட்டான புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளனர். 1.3 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள அனு இம்மானுவேல், லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறார். அல்லுடு அதுர்ஸ் எனும் தெலுங்கு படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











