இதெல்லாம் பண்ணி 48 வருஷம் ஆகுது.. நிஜமாவே அந்தர் பல்டி அடித்த அனு ஹாசன்.. தீயாக பரவும் வீடியோ!

சென்னை: இந்திரா படத்தில் "அச்சம் அச்சமில்லை" பாடலுக்கு நடனமாடி நடித்த அனு ஹாசன் 53 வயதிலும் செம ஃபிட்டாக இருக்கும் வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் தான் அனு ஹாசன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்திரா, ஆளவந்தான், நள தமயந்தி, ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அனு ஹாசன் அதன் பின்னர் படங்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் குடும்ப வாழ்க்கை மற்றும் உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Anu Haasan doing swing stunt and says she done it before 48 years

இன்ஸ்டாகிராமில் கணக்குத் தொடங்கி உள்ள அனு ஹாசன் மீண்டும் ரசிகர்களுடன் டச்சில் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தான் ஃபிட்டாக இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்.

கமல்ஹாசன் அண்ணன் மகள்: சந்திரஹாசன், சாருஹாசன், கமல்ஹாசன் மூவரும் அண்ணன் தம்பிகள். அதில், மூத்த அண்ணனாக சந்திரஹாசன் மகள் தான் நடிகை அனு ஹாசன். 53 வயதாகும் அவர் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இந்த வயதில் எப்படி இருக்கிறேன் பாருங்க என அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு அவர் வயது ஒத்த நடிகைகளை பொறாமைப்பட செய்து வருகிறார்.

இந்திரா ஹீரோயின்: சுஹாசினி மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 1995ம் ஆண்டு வெளியான இந்திரா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அனு ஹாசன். அந்த படத்திற்கு பிறகு ஹீரோயினாக இவர் நடிக்கவே இல்லை. ஆளவந்தான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த இவர், ரன், நள தமயந்தி, ஆஞ்சநேயா, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், சர்வம், ஆதவன், புத்தம் புது காலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

53 வயதிலும் செம ஃபிட்னஸ்: 53 வயதாகும் நடிகை அனு ஹாசன் பாக்ஸிங் செய்வது, கம்பி மீது ஏறுவது, மோட்டார் பைக் ஓட்டுவது என ஏகப்பட்ட ஆக்டிவிட்டிகளை செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அனு ஹாசனின் லைஃப் ஸ்டைல் பலருக்கும் ரோல் மாடலாக மாறியிருக்கிறது.

அந்தர் பல்டி அடித்த அனு ஹாசன்: இப்படியெல்லாம் பல்டி அடிப்பதை 48 வருஷத்துக்கு முன்னாடி 6வது படிக்கும் போது செஞ்சது என அனுஹாசன் சொல்ல, அவ்ளோ வருஷமெல்லாம் ஆகியிருக்காது என அவருடன் இருக்கும் டிரெய்னர்கள் சொன்னதும் சரி ஓகே ஒரு 44 வருஷம் கழித்து இதை பண்றேன் என கம்பியை பிடித்துக் கொண்டு தொங்கியபடி பல்டி அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சந்தோஷ் சுப்ரமணியன் பைக் சீன்: மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, ஜெனிலியா நடித்து வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஆரம்பத்தில் அனு ஹாசனிடம் லிஃப்ட் கேட்டுத் தான் மொத்த படத்தின் கதையும் சொல்வார் ஜெயம் ரவி. ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டிருந்த நான் இப்போ என்ன பைக் ஓட்டுறேன் பாருங்க என இரண்டு ஸ்க்ரீன் ஷாட்டையும் போட்டு லைக்குகளை குவித்து இருந்தார். கடந்த ஆண்டு தெலுங்கில் உஸ்தாத் மற்றும் பபுல்கம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X